ஸ்ரீதேவியின் மறுபிறவி! புகைப்படத்தை வெளியிட்ட செய்தி சேனல்…

நடிகை ஸ்ரீதேவியின் மறுபிறவி குறித்து செய்தி வெளியிட்ட சேனல் மீது நெட்டிசன்கள் கடும் ஆத்திரத்தில் உள்ளனர்.

துபாயில் மரணமடைந்த நடிகை ஸ்ரீதேவியின் உடல் மும்பை கொண்டுவரப்பட்டு, நேற்று அரசு மரியாதையுடன் இறுதி அஞ்சலி செலுத்தப்பட்டது.

இந்திய திரையுலகின் மிக முக்கிய நட்சத்திரமாக பார்க்கப்படும் ஸ்ரீதேவியின் இழப்பு திரையுலகிற்கு மிகப் பெரிய இழப்பு தான், அவருடைய மரணம் குறித்து பல்வேறு தகவல்கள் வந்ததால் சில ஊடகங்கள் ஸ்ரீதேவி இப்படித் தான் இறந்திருப்பார் என்று யுகங்கள் அடிப்படையில் எல்லாம் செய்திகள் வெளியிட்டன.

இதைக் கண்ட சிலர் ஸ்ரீதேவி என்ற ஒற்றை வார்த்தையால் சில கொடூரமான கொலைகள் ஊடகங்களின் கண்களுக்கு தெரியவில்லை என்று கூட கூறினர்.

இந்நிலையில் பிரபல ஹிந்தி சேனல் ஒன்று இதை எல்லாம் மிஞ்சும் வகையில் நடிகை ஸ்ரீதேவியின் மறுபிறவி என்று கூறி, ஒரு குழந்தை தொடர்பான புகைப்படத்தை குறிப்பிட்டு செய்தி வெளியிட்டுள்ளது.

இதைக் கண்ட நெட்டிசன்கள் அந்த செய்தி சேனலை திட்டி தீர்த்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.