உடல் எடை குறித்த விழிப்புணர்வு இன்று பெரும்பாலோனோரிடத்தில் வந்து விட்டிருக்கிறது. எல்லாரும் பாதுகாப்பான முறையில் மருத்துவர்கள் பரிந்துரைக்கும் முறையை தான் பின்பற்றுகிறார்களா என்றால் இல்லையென்றே பதில் கிடைக்கிறது.
எங்கோ பார்த்தது, கேட்டது, படித்ததை வைத்து பல்வேறு முயற்சிகளை எடுத்து உடல் ஆரோக்கியத்திற்கு பெரும் தீங்கு இழைத்துக் கொண்டிருக்கிறார்கள்.
ஒவ்வொருவரின் வாழ்க்கை முறை, சாப்பிடும் முறை, பழக்கங்கள் ஆகியவை மிகுந்த வேறுபாடுகளை கொண்டிருக்கும். ஆகையால் நீங்கள் இந்த முறையை பின்பற்றி உடல் எடையை குறைக்கலாமா? இதனால் வேறு எதாவது பிரச்சினைகள் வந்து விடாதே என்று மருத்துவர்களிடத்தில் தகுந்த ஆலோசனை பெற்றே அதனை பின் தொடர ஆரம்பிக்க வேண்டும்.
அரிசி உணவை தவிர்ப்பேன், தினமும் இரண்டு மணி நேர உடற்பயிற்சி,பாக்கெட் உணவுகளுக்கு நோ என்ற விதிமுறைகளுடன் கூடவே விதவிதமான பெயர்களில் டயட்டுகளை கடைபிடிக்கிறார்கள்.
ஆனால், உடல் எடையை குறைக்க முற்றிலும் விசித்திரமான அதே சமயம் பயங்கரமான முயற்சிகளும் எடுக்கப்படுகிறது அவற்றில் ஒன்றுதான் இது…
இன்றைய பின்பற்றப்படும் மிக விசித்திரமான டயட் என்றால் அது இது தான்.
அதாவது காஸ்மட்டிக் மருத்துவர்கள் உங்களது நாக்கில் ஒரு பேட்ச் போல வைத்து தையல் போட்டு விடுகிறார்கள். வலியெடுக்கும், நாக்கில் அதனை வைத்திருப்பதால் சரியாக உணவைச் சாப்பிட முடியாது.
இது வைத்ததே அதற்காகத்தானே…. ஆம், உணவு எடுத்துக் கொள்வதில் கட்டுப்பாடு இருக்க வேண்டும் என்பதற்காக தான் இந்த ஐடியா.
வலிக்கிறது அதனால் சாப்பாடு வேண்டும் பேசாமல் திட உணவுகளை விட திரவ உணவுகளை எடுத்துக் கொள்கிறேன் என்று சென்றுவிடுவோம் அல்லவா? இந்த முறையினால் ஒரு மாதத்தில் அதிகபட்சமாக 20 பவுண்ட் வரை குறைக்க முடியும் என்று சொல்கிறார்கள்.