உறவினர் திருமணத்திற்காக துபாய் சென்ற நடிகை ஸ்ரீதேவி கடந்த 24-ஆம் திகதி மரணமடைந்தார். அவர் இறந்த தகவல் அறிந்தவுடன் ஊடகங்களில் தலைப்புச் செய்தியாக ஸ்ரீதேவி வலம் வந்தார்.
துபாயில் இறந்த அவரது மரணம் குறித்து அங்கிருக்கும் ஊள்ளூர் ஊடகங்கள் பல்வேறு தகவல்களை தெரிவித்தால், ஸ்ரீதேவியின் மரணச் செய்தி, கடந்த 4 தினங்களாக ஊடங்களில் பரபரப்பாக பேசப்பட்டது.
ஆனால் ஸ்ரீதேவியின் கணவரான போனி கபூர் அதைப் பற்றி எதுவும் கூறாமல், அவருடைய செய்தி தொடர்பாளர் தான் தகவல்களை தெரிவித்து வந்தார்.
— SRIDEVI BONEY KAPOOR (@SrideviBKapoor) February 28, 2018
இந்நிலையில் மனைவியின் மரணத்திற்கு பின் இன்று போனி கபூர் மிகவும் உருக்கமான கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.
அதில், நான் என்னுடைய நண்பன், மனைவி மற்றும் இரண்டு பிள்ளைகளுக்கு தாயாரான ஸ்ரீதேவியை இழந்து தவிக்கிறேன். அதை சொல்வதற்கு வார்த்தையே இல்லை.
இந்த திடீர் இழப்பால் நாங்கள் இனி எப்படி வாழப் போகிறோம் நினைத்து வருந்துகிறேன். இது போன்ற சமயத்தில் அர்ஜுன் மற்றும் அனுஷ்கா மிகவும் உதவியாக இருந்ததாகவும், அதுமட்டுமின்றி குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் ஸ்ரீதேவியின் ரசிகர்கள் போன்றோருக்கு கடமைபட்டிருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் ஊடகங்கள் ஸ்ரீதேவி பற்றி பேச நினைத்தால் நல்ல விஷயங்கள் பற்றி பேசுங்கள். ஒரு நடிகைக்கு இறப்பு என்பது கிடையாது, அவர் எப்போதும் வெள்ளித்திரையில் ஜொலித்து கொண்டு தான் இருப்பார் எனவும் குறிப்பிட்டுள்ளார்.