உள்ளங்கால் அரிச்சா பணம் வருமா? இது தெரியாம போச்சே…?

உள்ளங்கை அரித்தால் பணம் வரும், உள்ளங்கால் அரித்தால் ஊருக்கு போக வேண்டி வரும் என்ற மூடநம்பிக்கை நம் மக்களிடையே உள்ளது.

ஒருவரது உள்ளங்கால் அரிப்பதற்கும் ஊருக்கு போவதற்கும் ஒரு சம்பந்தமும் இல்லை. உள்ளங்கால் அரிப்பதற்கு உண்மையான காரணம் வறட்சி அல்லது அளவுக்கு அதிகமாக நீரில் ஊறி இருப்பது.

ஒருவேளை உள்ளங்கால் சிவந்து, துர்நாற்றம் மற்றும் வெடிப்புகளுடன், தோல் உரிந்து அசிங்கமாக காணப்பட்டால், நிலைமை சற்று மோசமாக உள்ளது என்று அர்த்தம்.

ஒருவருக்கு இப்படி தீவிரமான உள்ளங்கால் அரிப்பு ஏற்படுவதற்கு பூஞ்சை தொற்று கூட காரணமாக இருக்கும்.

இப்படி உள்ளங்காலில் தொற்றுகள் ஏற்பட்டால், அதன் விளைவாக கடுமையான அரிப்புடன், எரிச்சலையும் உண்டாக்கும். இப்படிப்பட்ட உள்ளங்கால் அரிப்பை ஒருசில எளிய இயற்கை வழிகளின் மூலம் சரிசெய்யலாம்.

இருப்பினும் தீவிரமான நிலையில் உள்ளங்கால் இருப்பின், இயற்கை வழிகளை முயற்சிக்கும் முன் மருத்துவரிடம் கேட்டுக் கொள்ளுங்கள்.