தற்போதுள்ள சூழலில் பலருக்கும் ஞாபக சக்தி குறைவாக இருப்பதற்கு காரணம் நாம் சாப்பிடும் உணவிலிருந்து மூளைக்கு தேவையான சத்துக்கள் கிடைக்காமல் இருப்பது தான்.
அப்படி என்ன சாப்பிட்டால் ஞாபக சக்தி பெருசா வளந்திட போகிறது? என கேட்கிறீர்களா, இது உங்களுக்கான சில எளிய டிப்ஸ்.
- பால் மற்றும் அது சார்ந்த பொருட்களில் இயற்கை கால்சியம் அதிகம் இருப்பதால், அதை சாப்பிடும் பட்சத்தில் நம் மூளைச் செல்கள் நன்கு செயல்படும். குறிப்பாக தயிரில் ஞாபக சக்தியை அதிகரித்திடும் அமினோ ஆசிட் தைரோசின் என்னும் சத்துப் பொருள் உள்ளது.
- பாதாம், பிஸ்தா போன்ற நட்ஸ் வகைகளில் மூளையின் சக்தியை அதிகரிக்கும் விட்டமின் ஈ மற்றும் பி6 இருப்பதால், தினமும் காலை ஒரு கை அளவு சாப்பிடுங்கள். அது மூளைக்கு மட்டுமின்றி முழு உடலுக்கும் நல்லதென நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
- ஒரு வாரம் தொடர்ந்து கேரட் சாப்பிட்டு வர நம் மூளையில் இருக்கும் செரோட்டனின், அசிட்டின் கோலைன் என்ற ரசாயனப் பொருட்கள் உற்பத்தியாகி மூளையின் செயல்பாடுகள் அதிகரிக்குமாம்.
- மூளையின் செயல்பாடுகளை தக்க வைத்துக்கொள்ள தேவைப்படும் ஒரு வித கொழுப்பு அமிலம் மீன்களில் இருந்து தான் கிடைக்கின்றதாம். மீனில் ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட் அதிகம் உள்ளதால் மூளையின் செயல்பாட்டிற்கு மட்டுமின்றி இதயத்திற்கும் நல்லது.
- தினமும் காலையில் எழுந்தவுடன் ஒரு ஸ்பூன் தேனை சாப்பிட்டால், எடை குறைவதோடு ஞாபக சக்தியும் அதிகரிக்கச் செய்கிறது. தேனில் உள்ள ஒரு வகை அமிலம் நம் மூளையின் ரத்த ஓட்டத்தை அதிகரிக்கச் செய்வதால் ஞாபக சக்தி அதிகரிக்கிறது.