சிரியாவில் கடந்த 9 நாட்களில் நடந்த தாக்குதலில் மட்டும் சுமார் 700 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
நெஞ்சை உலுக்கும் ஒரு சம்பவம் சிரியாவில் நடந்து வருகிறது, ஆனால் இந்தியா முழுவதும் உள்ள ஊடகங்கள் நடிகை ஸ்ரீதேவியின் மரணத்தை பற்றி தான் பேசி வருகின்றன.
பொம்மைகளை வைத்து விளையாடும் வயதில் ரத்தத்தையும், குண்டு வெடிப்பையும் கேட்டுக் கொண்டிருக்கின்றனர் சிரியா நாட்டு குழந்தைகள்.
பார்ப்போர் உள்ளத்தை நொருங்க செய்யும் விதத்தில் ஒவ்வொறு புகைப்படங்களும் உள்ளான ஒட்டுமொத்த சிரியாவும் தற்போது ரத்த பூமியாகவே காட்சியளிக்கிறது.
நடிகர் விவேக் டுவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில்,
சிரியா குழந்தைகளின் கதறல் உலக நாடுகளின் காதில் விழவில்லையா? ஐ.நா வுக்கு கண் இல்லையா?இதை விவாதிக்க சர்வ தேச நீதி அமைப்புகளுக்கு வாய் இல்லையா? இந்தக் கொடுமை தீர வழி இல்லையா? அன்று ஶ்ரீலங்கா இன்று சிரியா! ஆக,யாருக்குமே இதயம் இல்லையா? I feel guilty to witness ‘‘tis cruelty pic.twitter.com/sosdftOxfH
— Vivekh actor (@Actor_Vivek) February 27, 2018