இறந்த தாயின் “மம்மி”யுடன் வாழும் பெண்

உக்ரைன் நாட்டில் தன் தாயின் உடலுடன் 30 ஆண்டுகளாக வாழும் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட பெண்ணை பொலிசார் மீட்டனர்.

77 வயதுள்ள அந்தப் பெண் வீட்டுக் கதவைத் திறப்பதும் இல்லை, அக்கம் பக்கத்தில் யாருடனும் பேசுவதுமில்லை.

என்றாலும் மக்கள் அவர் மீது பரிதாபப்பட்டு அவர் வீட்டு வாசலில் அவருக்காக உணவுப் பொருட்களை வைப்பது வழக்கம்.

நீண்ட நாட்களாக பூட்டப்பட்டிருக்கும் அந்த வீட்டைக் குறித்து ஒருவர் புகார் கொடுத்ததின் பேரில் வந்த பொலிசார் வீடு உள் பக்கமாக பூட்டப்பட்டிருப்பது கண்டு ஜன்னலை உடைத்துக் கொண்டு உள்ளே நுழைந்தனர்.

உள்ளே சென்றபோது 77 வயதுடைய ஒரு பெண் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டதால்கால்கள் நடக்க இயலாத நிலையில் அமர்ந்திருந்ததைக் கண்டனர்.

உடனடியாக ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

மேலும் வீட்டை சோதனையிட்ட பொலிசார் மற்றொரு அறையில் பதப்படுத்தப்பட்ட ஒரு உடல் சோஃபா ஒன்றில் கிடத்தி வைக்கப்பட்டிருப்பதைக் கண்டனர்.

மீட்கப்பட்ட பெண்ணின் தாயின் உடலாக இருக்கும் என்று கருதப்படுகிறது, அந்தப் பெண் இறந்து குறைந்தது 30 ஆண்டுகளாவது ஆகியிருக்கலாம் என்று பொலிசார் கருதுகின்றனர்.

அந்தப் பெண்ணுக்கு வெண்ணிற உடையும் தலையில் ஸ்கார்ஃப், ஷூ, சாக்ஸ் என நேர்த்தியாக அணிவிக்கப்பட்டிருந்தது.

மம்மியாக்கப்பட்ட உடல் தடயவியல் ஆய்வுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது, பொலிசார் விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.