ஸ்ரீதேவிக்கும், ஜெயபிரதாவுக்கும் இடையேயான பகையை போக்க இரண்டு ஹீரோக்கள் ஒரு காரியம் செய்தும் ஒன்றும் நடக்கவில்லை. திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்ள துபாய் சென்ற ஸ்ரீதேவி மரணம் அடைந்தார்.
அவரது உடல் நேற்று இரவு மும்பை கொண்டு வரப்பட்டது. ஸ்ரீதேவியின் உடல் மும்பையில் மகாராஷ்டிர அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்படுகிறது.
இந்த நிலையில், அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்த நடிகை ஜெயபிரதா வந்தார். ஆரம்பத்தில் இருந்தே ஸ்ரீதேவிக்கும், ஜெயபிரதாவுக்கும் ஆகவே ஆகாது.
ஸ்ரீதேவிக்கும், ஜெயபிரதாவுக்கும் இடையே தொழில் போட்டி, பகை இருந்தது அனைவருக்கும் தெரியும். ஒருவருக்கு ஒருவர் முகம் கொடுத்து பேசாத அளவுக்கு வெறுப்பில் இருந்தார்கள்.
இவர்களை இணைப்பதற்கு பலர் முயற்சி செய்துள்ளனர்.
ராஜேஷ் கன்னா, ஜிதேந்திரா, ஸ்ரீதேவி, ஜெயபிரதா சேர்ந்து நடித்த படம் மக்சத். அந்த படத்தில் ஜெயபிரதா ஜிதேந்திராவுக்கும், ஸ்ரீதேவி ராஜேஷ் கன்னாவுக்கும் ஜோடியாக நடித்தார்கள்.
ஸ்ரீதேவிக்கும், ஜெயபிரதாவுக்கும் இருக்கும் பகை பற்றி ராஜேஷ் கன்னா, ஜிதேந்திராவுக்கு தெரியும். படப்பிடிப்பின்போது இருவரையும் சமரசம் செய்ய ஒரு திட்டம் தீட்டினார்கள்.
ராஜேஷ் கன்னா, ஜிதேந்திரா ஆகியோர் சேர்ந்து ஸ்ரீதேவியையும், ஜெயபிரதாவையும் ஒரு அறையில் வைத்து பூட்டினார்கள். அப்படியாவது அவர்கள் பேசிப் பழகுவார்கள் என்று நம்பினார்கள்.
இரண்டு மணிநேரம் கழித்து ஜிதேந்திரா மற்றும் ராஜேஷன் கன்னா அந்த அறையின் கதவை திறந்தபோது அதிர்ச்சி அடைந்தனர். காரணம் ஜெயபிரதாவும், ஸ்ரீதேவியும் ஆளுக்கு ஒரு மூலையில் முகத்தை திருப்பிக் கொண்டு உட்கார்ந்திருந்தனர்.