யாழ்ப்பாணம் புங்குடுதீவு மாணவி சிலோகநாதன் வித்தியா கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பான வித்தியா கொலை இன்று மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.
இந்த கொலைச் சம்பவம் தொடர்பான பிரதான சந்தேகநபர் தப்பிச் செல்ல உடந்தையாக இருந்த குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட வட மாகாண முன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபர் லலித் ஜயசிங்கவிற்கு எதிராக இந்த வழக்கு விசாரணை நடைபெறவுள்ளது.
ஊர்காவற்றுதுறை நீதவான் நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.இறுதியாக நடைபெற்ற வழக்கு விசாரணையின் தம்மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டை லலித் ஜயசிங்க மறுத்திருந்தார்.முன்னாள், பொலிஸ் மா அதிபரின் பணிப்புரையின் பேரிலேயே தாம் சந்தேகநபரை விடுத்ததாக வாக்குமூலம் வழங்கிய உப பொலிஸ் பரிசோதகரை கைதுசெய்யுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
எனினும், குறித்த உப பொலிஸ் பரிசோதகர் தலைமறைவாகியுள்ளதாக பொலிஸார் நீதிமன்றத்திற்கு அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.