சிரியாவில் உள்நாட்டு யுத்தம் தீவிரமடைந்துள்ள நிலையில், பெருமளவானவர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.
குறிப்பாக சிறுவர்கள், குழந்தைகள் கொன்று குவிக்கப்பட்டுள்ளனர். கடந்த 7 நாட்களில் 700க்கும் மேற்பட்ட சிறுவர்கள், குழந்தைகள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.
இதற்கு உலக நாடுகள் பலவும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இந்நிலையில், யாழ்ப்பாணத்திலும் இன்று கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
சிரியாவில் யுத்தத்தில் பெருமளவான மக்கள் படுகொலை செய்யப்படுவதை கண்டித்தும், யுத்தத்தை நிறுத்தக்கோரியும் யாழ்.நகரில் இளைஞர்கள் இணைந்து கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை நடத்தியுள்ளனர்.
இன்று காலை 10 மணி தொடக்கம் யாழ். மத்திய பேருந்து நிலைத்தின் முன்பாக இடம்பெற்ற இந்த கவனயீர்ப்பு போராட்டம் ஒரு மணித்தியாலம் வரையில் நடைபெற்றது.