துபாயில் மரணமடைந்த ஸ்ரீதேவியின் உடல் நேற்று முழு அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது.
நடிகைக்கு ஏன் இந்த அரசு மரியாதை என சமூகவலைத்தளங்களில் கண்டனங்கள் எழுந்தன.
இதுகுறித்து மஹாராஷ்டிரா அரசு விளக்கம் அளித்துள்ளது.
குடியரசுத்தலைவர்கள், முன்னாள் குடியரசுத்தலைவர்கள், பிரதமர்கள், மத்திய அமைச்சர்கள், மாநில கேபினட் அமைச்சர்கள் இறந்தால் மட்டுமே முழு அரசு மரியாதை வழங்கப்படும்.
ஆனால் தற்போது முழு அரசு மரியாதை வழங்கும் பொறுப்பு மாநில அரசுகளிடம் உள்ளது.
தற்போது யாருக்கு வழங்க வேண்டும் என்பதை அந்த மாநில அரசுகளே முடிவு செய்து கொள்ளலாம்.
மறைந்த ஒருவருக்கு உள்ள புகழ் மற்றும் சமுதாயத்துக்கோ அல்லது அவர் சார்ந்த துறைக்கோ தொண்டு ஆற்றி இருந்தால் அதனை கருத்தில் கொண்டு முடிவெடுக்கலாம்.
இதுதொடர்பாக முதல்வர், அமைச்சர்களுடன் கலந்து ஆலோசித்து முடிவெடுக்கலாம்.
முடிவெடுத்த பின்னர், அப்பொறுப்பு மாநில காவல்துறைக்கு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.