தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே ஒரு வீட்டிற்கு உணவு தேடி சென்ற பூனை எதிர்பாராத விதமாக தலையில் சொம்பு மாட்டிகொண்டது.அதனை தலையில் இருந்து அகற்ற நிறைய முயற்சிகளை மேற்கொண்டது.
ஆனால் அனைத்தும் தோல்வியிலே முடிந்தது.பின் பூனை பரிதவிப்பதை கண்ட பொதுமக்கள் சொம்பில் இருந்து பூனையின் தலையை எடுக்க முயற்சி செய்தனர்.
சுமார் ஒரு மணி நேர போரட்டத்திற்கு பிறகு சொம்பில் இருந்து பூனையின் தலை எடுக்கபட்டது. தலை வெளியே வந்த அடுத்த நொடியே பூனை ஒரே ஓட்டமாய் ஓடிவிட்டது.
தலையில் செம்பு மாட்டிக்கொண்டதால் பறித்தவித்த பூனை – உணவுத்தேடி வீட்டில் நுழைந்த பூனைக்கு நேர்ந்த சோகம் #Cat #Tuticorin pic.twitter.com/BmwJutFOkB
— Polimer News (@polimernews) March 1, 2018