இலங்கையில் தமிழர்கள் மீதான சித்திரவதைகளை பாதுகாப்பு படையினர் மற்றும் பொலிஸார் தொடர்ந்து முன்னெடுக்கின்றனர் என்பதற்கான புதிய ஆதாரங்களை அல்ஜஸிரா சர்வதேச ஊடகம் வெளிப்படுப்படுத்தியுள்ளது.
பாதிக்கப்பட்ட தமிழர்களின் வாக்குமூலங்களுடன் அந்த ஊடகம் இன்று வியாழக்கிழமை வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆட்சிக்கு வந்து 3 ஆண்டுகள் கடந்துவிட்டன.
தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரின் போது மனித உரிமை மீறல்களில் ஈடுபட்ட என்ற குற்றச்சாட்டையுடைய அரசை அவர் பொறுப்பேற்றுக்கொண்டார்.
சர்வாதிகாரமற்ற ஆட்சியை முன்னெடுப்பேன் என மைத்திரிபால சிறிசேன உறுதியளித்தார்.
எனினும் தமிழர்களுக்கு எதிரான சித்திரவதைகள் தற்போதும் தொடர்கின்றன என்பதற்கான ஆதாரங்கள் அல்ஜஸிராவுக்குக் கிடைத்துள்ளன.
இலண்டனிலுள்ள அல்ஜஸிராவின் பிரத்தியேக நிருபர் பரனாபை பிலிப்ஸ் இந்த ஆதாரங்களைச் சேகரித்துள்ளார் என்றுள்ளது.
இதேபோன்ற ஆதாரங்களை ஏஎப்பி சர்வதேச ஊடகம் சில மாதங்களுக்கு முன்னர் வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
அண்மையில் வெளிநாடுகளுக்கு சென்றவர்களிடம் மனித உரிமை செயற்பாட்டாளர்கள் பெற்றுக்கொண்ட வாக்குமூலங்களே இவையாகும் என அல்ஜசீரா ஊடகம் மேலும் தெரிவித்துள்ளது.