இதய நோய்கள் என்பது உலகளவில் ஆண்களையும் பெண்களையும் அச்சுறுத்தும் விஷயமாக இருந்து வருகிறது. அதிலும் பெண்கள் இந்த இதய நோயால் பெரிதும் பாதிப்படைகின்றனர் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
பெண்கள் சீக்கிரமாகவே பருவமடைவதால் இதய நோய்கள் வருவதற்கான வாய்ப்பு உள்ளது. 13 வயதில் பருவமடையும் பெண்களை விட 12 வயதிற்கு முன்னாடியே பருவமடையும் பெண்கள் 10% இதய நோய்கள் வருவதற்கான வாய்ப்பை பெறுகின்றனர்.
கடுமையான ப்ளூ காய்ச்சலால் அவதிப்பட்டு இருந்தாலும் அதனால் இதய நோய்கள் வர வாய்ப்புள்ளது. இந்த கடுமையான ப்ளூ பாக்டீரியா மற்றும் வைரஸ் நம் இதயத்திற்குள் ஊடுருவி இந்த மாதிரியான பிரச்சினையை ஏற்படுத்த வாய்ப்புள்ளது.
டயட் மாத்திரைகள் மருந்துகள் இதயத்திற்கு கேடு விளைவிக்க கூடியது. இந்த டயட் மாத்திரைகள் உங்கள் இரத்த அழுத்தத்தை அதிகரித்து மற்றும் இதயத் துடிப்பையும் அதிகரித்து இதய செயல்பாட்டுக்கு நெருக்கடி விளைவித்து விடும். நீங்கள் தொடர்ந்து இந்த டயட் மாத்திரைகளை எடுத்து வந்தால் கண்டிப்பாக உங்கள் இதயம் பாதிக்கப்படுவது உறுதி.
நீங்கள் கர்ப்ப கால நீரிழிவு நோயால் அவதிப்பட்டு இருந்தால் இரத்த அழுத்தம் போன்ற பிரச்சினைகளால் இதய நோய்கள் வர வாய்ப்புள்ளது.
நீங்கள் உணர்வுப் பூர்வமான மன அழுத்த பிரச்சினைகள், மனமுடையும் கவலைகள் போன்றவற்றால் பாதிப்படைந்து இருந்தால் இதய நோய்கள் வர வாய்ப்புள்ளது.
தினசரி இரண்டு முறை ஆல்கஹால் அருந்துவதால் இதய நோய்கள் வர அதிகமான வாய்ப்புள்ளது. எனவே இதை குறைவான அளவில் குடிப்பது நல்லது. இதை தவிர்த்து விடுவது மிகவும் நல்லது.
முடக்கு வாதம் பொதுவாக பெண்களைத் தான் அதிகளவில் தாக்குகிறது. இந்த வாதமும் பெண்களுக்கு இதய நோய்கள் வர காரணமாக அமைகிறது.
நீங்கள் தனிமையாக இருந்தாலோ அல்லது சமூகத்தால் ஒதுக்கப்பட்டு மன அழுத்தத்தில் இருந்தாலோ இதய நோய்கள் வர வாய்ப்புள்ளது. இதனால் 30% வர இதய நோய்கள் வரும் அபாயம் உள்ளது.
நீங்கள் அதிக மன அழுத்தத்தில் இருந்தால் கார்டிசோல் என்ற மன அழுத்த ஹார்மோன் அதிகரித்து இதய நோய்கள் வர காரணமாக அமைகிறது.
நாள்பட்ட கவனக் குறைவு கேளாறு போன்றவைகளும் இதய நோய்கள் வர காரணமாக அமைகிறது. இந்த மாதிரியான கவனக் குறைவு கோளாறால் அவதிப்படும் பெண்களுக்கு இதயத் துடிப்பு மற்றும் இரத்த அழுத்தம் அதிகரிக்க வாய்ப்புள்ளது.