பூஞ்சைகாளானால் சொறி, சிரங்கு, அரிப்பு உள்ளதா..?

படர்தாமரை மற்றும் பூஞ்சைகாளானால் போன்றவைகளால் அரிப்பு ஏற்பட்டு கால் தொடைகளுக்கு இடையில் புண்கள் மற்றும் சொரிவதால் உண்டாகும் புண்கள் ஆகியவைகளால் அவதியா இதை படியுங்கள்.

இது தொற்று நோய் தான் ஆனால் சிலருக்கு தானாகவே தோன்றும். ஆண்கள் மற்றும் பெண்கள் இருபாலருக்குமே இந்த பூஞ்சைக்காளான் ஏற்படுகின்றது. ஈரமான உள்ளாடைகள் மற்றும் இறுக்கமான உள்ளாடைகளால் வியர்வை மற்றும் ஈரப்பதம் தொடர்ந்து இருக்கும் போது தோல்கள் மென்மையாகிவிடும். இப்போது மீண்டும் மீண்டும் துணி உரசும்போது புண்கள் தோன்றிவிடுகின்றன.

நாளடைவில் அழுக்குகள் மற்றும் கிருமிகள் சேர்ந்து பூஞ்சைக் காளானாக மாறிவிடுகின்றன. இவைதான் தொற்றுநோய் ஏற்படக்காரணம். ஒருவர் பயன்படுத்திய டாய்லட் மற்றும் சோப்புகளை அடுத்தவர் பயன்படுத்தக்கூடாது. உள்ளாடைகளையும் பயன்படுத்தக்கூடாது. இவ்வாறு பயன்படுத்தினாலும் இந்த பூஞ்சைக்கிருமிகள் தொற்று வரும். பெண்களின் நேப்கின்கள் மற்றும் உள்ளாடைகளை அடுத்தவருடன் பகிரக்கூடாது. இது தொற்று நோயை உண்டாக்கும்.

தினமும் குளித்து மறைவுப்பகுதிகள், காலிடுக்கு, இடுப்பு போன்றவற்றை நன்றாக தேய்த்து குளித்தாலே போதும். மேலும் நன்றாக காய்ந்த சுத்தமான உள்ளாடைகளை தினம் அணியவேண்டும். சுத்தமாகவும் சுகாதாரமாகவும் இருக்கவேண்டும். பொது கழிவறைகள் சுத்தத்தை எதிர்பார்க்க முடியாது அதனால் கைகளை நன்றாக கழுவிவிட்டு தான் வரவேண்டும். வெஸ்டர்ன் வகை டாய்லட்கள் வேண்டாம்.

இந்த தொற்று நோய் பரவ நிறைய வாய்ப்புண்டு. பெண்களை விட ஆண்களுக்கு இந்நோய் அதிகம் வரக்காரணம் இவர்களது உள்ளாடைகள் பெரும்பாலும் ”கட்” வகைகளில் இருப்பதால் தான், அதை தவிர்த்து டிரங்க் வகை உள்ளாடைகளை பயன்படுத்தவும்.

எவ்வளவு பாதுகாப்பாக இருந்தும் அரிப்பு நோய் வந்துவிட்டால் கவலை வேண்டாம் சுடுநீரில் சிறிது டெட்டால் போன்ற கிருமிநாசினியை கலந்து அதை அந்த மறைவுப்பகுதிகளில் பூச வேண்டும். இப்போது சிறிது எரிச்சல் ஏற்படும். ஆனால் புண்கள் ஆறிவிடும்.

வேலைமுடித்து இரவு வீட்டுக்கு சென்றதும் உள்ளாடை தவிர்த்து வேட்டி போன்ற காற்றோட்டமான காலாடைகளை அணியவும். இது இறுக்கத்தை தவிர்க்கும். இரவு தூங்குமுன்பு தேங்காய் எண்ணெயை தொட்டு பாதிக்கப்பட்ட பகுதிகளில் தேய்த்துவிடுங்கள் ஒரு வாரத்தில் புண்கள் ஆறிவிடும். கணவன் மனைவி இருவருக்கு யார் ஒருவருக்கு வந்தாலும் அடுத்தவர்க்கு தொற்றிக்கொள்ளும் அதனால் மேற்கண்டவற்றை பின்பற்றுங்கள்.