10 வயது குறைவான நபரை மணக்கிறார் நடிகை ஸ்ரேயா..

தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வந்த ஸ்ரேயாவுக்கு விரைவில் திருமணம் நடக்கவிருப்பதாக செய்திகள் வெளியாகின.

தமிழில் எனக்கு 20 உனக்கு 18 படத்தின் மூலம் அறிமுகமாகி, சிவாஜி, அழகிய தமிழ் மகன், கந்தசாமி என முன்னணி நாயகர்களுடன் ஜோடி போட்டவர் ஸ்ரேயா.

தொடர்ந்து, தெலுங்கு, இந்தி படங்களிலும் நடித்து வந்தவர், காயத்ரி படத்துடன் நடிப்பதை தவிர்த்து வந்தார்.

இந்நிலையில் இவருக்கும் ரஷ்யாவை சேர்ந்த விளையாட்டு வீரரான ஆண்ட்ரே கோஷ்சீவுக்கும் விரைவில் திருமணம் நடக்கவிருப்பதாக கூறப்பட்டது.

ஸ்ரேயாவுக்கு வயது 35, ஆண்ட்ரேவுக்கு 25 தானாம், தன்னை விட பத்து வயது இளையவரை திருமணம் செய்து கொள்ளவிருக்கிறார்.