தமிழ்நாடு, நாகை பட்டினத்தில் வெளிநாட்டு காதலர்கள், இந்து முறைப்படி, தாலி கட்டி திருமணம் செய்து கொண்டனர்.
பின்லாந்தைச் சேர்ந்த யோகா ஆசிரியர் ஜுகா, வயது 42, மலேஷியாவைச் சேர்ந்த பெண், வோங்வெய்கிட், வயது 40. இவரும், யோகா கற்றுக் கொள்வதற்காக, மத்திய பிரதேச மாநிலம், ஜெபல்பூருக்கு வந்திருந்தனர். அப்போது, காதல் வயப்பட்டனர்.
இந்து கலாசாரத்தின் மீது கொண்ட பற்றின் காரணமாக, இந்து முறைப்படி, திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர்.
நாகை மாவட்டம், சீர்காழி அடுத்துள்ள சித்தர்புரத்தில் உள்ள சித்தர் பீடத்துக்கு, நேற்று வந்த வெளிநாட்டு காதலர்கள், சித்தர்களை வழிபட்டனர். பின், கோபூஜை மற்றும் முதியவர்களுக்கு பாத பூஜை செய்தனர்.
தொடர்ந்து, வேத மந்திரங்கள் முழங்க, மங்கள வாத்திய இசையுடன், அம்மி மிதித்து, அருந்ததி பார்த்து, தாலி கட்டி, திருமணம் செய்து கொண்டனர்.
வாழ்த்தியவர்களிடம் ஆசி பெற்றதுடன், அனைவருக்கும் விருந்தளித்து உபசரித்தனர்