இந்தியா இளம் பெண்ணைப் போன்று செயற்பட்டதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
இதன் காரணமாக இந்தியா, இலங்கையை தவறாக புரிந்து கொண்டுள்ளதென அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்தியாவின் திருப்பதி கோவிலுக்கு சென்று மத வழிப்பாடுகளில் ஈடுபட்டதன் பின்னர் ஊடகங்களில் கருத்து வெளியிடும் போதே மஹிந்த இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
“இந்தியா எங்களை தவறாக புரிந்து கொண்டுள்ளது. அது செயற்பாடு இளம் பெண் போன்று இருந்ததாக இந்தியாவின் முன்னாள் தூதுவர் அனுபாமா ராவ் இதனை கூறினார்.
இலங்கை தொடர்பில் இந்தியா கொண்டுள்ள கொள்கைகள் சரியானவைகள் என்ற போதிலும் சில விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடல் மேற்கொள்வது அவசியமாகும்.
அத்துடன் இலங்கையின் துறைமுகம் மற்றும் நெடுஞ்சாலை நிர்மாணிப்பதற்கு முதலில் இந்தியாவுக்கே அழைப்பு விடுக்கப்பட்டது. எனினும் இந்தியா அதற்கு அக்கறை காட்டவில்லை. அதன் பின்னரே அந்த ஒப்பந்தத்தை சீனா ஏற்றுக் கொண்டது.
துறைமுகம் மற்றும் நெடுஞ்சாலை திட்டத்தை நாம் முதலில் இந்தியாவுக்கே சமர்பித்தோம். இந்தியாவுக்கு ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை நிர்மாணிப்பது தொடர்பில் ஆர்வமாக இருந்த போதிலும், அந்த சந்தர்ப்பத்தில் அவர்களுக்கு அது அவசியமாக இருக்கவில்லை. யுத்தமே அதற்கு காரணமாக இருக்கும் என நான் நினைக்கின்றேன்.
இதனால் நாம் செய்வது. நாம் சீனாவிடம் சென்றோம். நாம் இது குறித்து பேசியவுடன் அவர்கள் உடனடியாக விருப்பம் வெளியிட்டனர். அது வர்த்தக கொடுக்கல் வாங்கல் மாத்திரமே. நாம் ஹம்பாந்தோட்டை துறைமுகத்தின் முக்கியத்துவம் குறித்து அறிந்திருந்தோம். அவர்கள் அதற்கு ஆதரவு வழங்கும் போது தலைவர் என்ற ரீதியில் நாம் நாட்டை பார்த்து கொள்ள வேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.