சிரியாவில் நடந்து வரும் ராணுவ தாக்குதல் காரணமாக கடந்த 11 நாட்களில் மட்டும் இதுவரை 900 பேர் மரணம் அடைந்து இருக்கிறார்கள். அங்கு தினமும் 5 மணி நேரம் போர் நிறுத்தம் செய்யப்படுகிறது.
இந்த நேரத்தில் ஐ.நா அனுப்பி இருக்கும் உதவிக் குழு அங்கே சென்று உதவிகள் செய்யும். மருத்துவ குழு, உணவு குழு என நிறைய உதவி குழுக்கள் ஐ.நா மூலம் அங்கு அனுப்பப்பட்டு இருக்கிறது.
இந்நிலையில் உணவு மற்றும் மீட்புதவிகளை கொடுக்க வரும் ஐ.நா மற்றும் சர்வதேச தொண்டு நிறுவனங்களில் பணியாற்றும் அதிகாரிகள் சிரியா பெண்களை பாலியல் இச்சைகளுக்கு இணங்கியும், சில பெண்களை தற்காலிக திருமணம் செய்தும், பல நாட்களை தங்களுக்கு அளிக்கப்பட்டு இருக்கும் வீட்டில் அந்த பெண்களை வேலை செய்ய வைக்கிறார்கள்.
அதேபோல் பாலியல் விருப்பத்திற்காகவும் பயன்படுத்திக் கொள்கிறார்கள். இது எல்லாம் எதற்கு போரால் அவதிபடும் மக்களுக்கு அரசு தரும் மருந்தா, இல்லை பெண்களின் பாதுகாப்பு இந்நிலையிலும் காப்பதற்கு மனமில்லை இங்கு யாருக்கும். இதை எங்கள் அமைப்பு செய்வதில்லை என்று ஐ.நா மறுத்துள்ளது. ஒப்பந்தம் செய்து இருக்கும் குழுக்களின் ஆண்களே இதை செய்கிறார்கள் என்ற விளக்கமும் கொடுத்துள்ளது.
இந்த பிரச்சனையின் துவக்கம் 2015ல் இருந்தே நடந்து வந்ததால் பல பெண்கள் அங்கு சென்று வந்தால் கர்ப்பிழக்கப்பட்ட பெண் என்று கூறுவார்கள் என்று பட்டினியாக இருக்கிறார்கள்.