அதிர்ஷ்டம் கொட்ட போகும் ராசி எது?

இந்த ராசிக்கார்களுக்கு தேவையான அளவுக்கு பணவரவு இருக்கும். தேவையற்ற செலவுகள் எதுவும் இருக்காது. சகோதரர்கள் அனுசரணையாக நடந்துகொள்வார்கள். முக்கிய முடிவுகளை இந்த வாரம் எடுப்பது சாதகமாக முடியும். ஒரு சிலருக்கு உணவினால் அலர்ஜி ஏற்படக்கூடும். வெளியில் சாப்பிடுவதைத் தவிர்க்கவும்.

அலுவலகத்தில் உற்சாகமான சூழ்நிலையே காணப்படுகிறது. உங்கள் பணிகளில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். மேலதிகாரிகளின் ஆதரவு மகிழ்ச்சி தரும்

வியாபாரத்தில் எதிர்பார்த்ததை விடவும் கூடுதலாக விற்பனையும், லாபமும் கிடைக்கும். பழைய பாக்கிகள் வசூலாகும். வேலையாட்களின் ஒத்துழைப்பு சுமாராகத்தான் இருக்கும்.

கலைத்துறையைச் சேர்ந்தவர்களுக்கு வாய்ப்புகள் கிடைப்பது சற்றே தடைப்படக்கூடும்.மூத்த கலைஞர்களை அனுசரித்துச் செல்வது நல்லது.

மாணவ மாணவியர்க்கு படிப்பில் ஆர்வம் குறையும். தேவையற்ற எண்ணங்களால் மனக்குழப்பம் ஏற்படும்.

குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்மணிகளுக்கு ஓரளவு மகிழ்ச்சியான வாரமாக இருக்கும். வேலைக்குச் செல்லும் பெண்மணிகளுக்கு அலுவலகத்தில் உற்சாகமான சூழ்நிலையே காணப்படும்.

ரிஷபம்:

இந்த ராசிக்கார்களுக்கு பணவரவு போதுமான அளவுக்கு இருக்காது என்பதால் வெளியில் கடன் வாங்க நேரும். மூன்றாவது நபர்களால் குடும்பத்தில் பிரச்னை ஏற்படக்கூடும் என்பதால் எச்சரிக்கையாக இருக்கவும்.. ஒருசிலருக்கு சிறிய அளவில் ஆரோக்கியம் பாதிக்கப்படும். வழக்குகள் எதுவும் இருந்தால் உங்களுக்குச் சாதகமாக முடியும். வராது என்று நினைத்த கடன் தொகை வந்து சேரும்.

அலுவலகத்தில் வழக்கமான பணிகளையும் கூடுதல் கவனத்துடன் செய்வது அவசியம். சிறு தவறுகள் ஏற்படவும் அதனால் மேலதிகாரியின் கண்டனத்துக்கு உள்ளாகவும் கூடும். சக பணியாளர்களை அனுசரித்துச் செல்வது நல்லது.

வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் சுமாராகத்தான் இருக்கும். பங்குதாரர்களிடம் எதிர்பார்க்கும் உதவிகள் கிடைப்பது தடைப்படும்.. பாக்கிகள் வசூலாவது தாமதமாகும்.

கலைத்துறையைச் சேர்ந்தவர்களுக்கு வாய்ப்புகள் கிடைத்தாலும் வருமானம் எதிர்பார்த்தபடி இருக்காது. மூத்த கலைஞர்களை அனுசரித்துச் செல்வது நல்லது.

மாணவ மாணவியர்க்கு படிப்பில் கூடுதல் கவனம் தேவை. ஆசிரியர்கள் பாடம் நடத்தும்போது அக்கறையுடன் கவனிக்கவும்.

குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்மணிகளுக்கு சற்று அமைதிக் குறைவான வாரம். பொறுமையும் சகிப்புத்தன்மையும் அவசியம். வேலைக்குச் செல்லும் பெண்மணிகளுக்கு அலுவலகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் தற்போது கிடைப்பதற்கில்லை.

மிதுனம்:

இந்த ராசிக்கார்களுக்கு எதிர்பார்த்ததை விட பணவரவு அதிகரிக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை காணப்படும். ஒரு சிலருக்கு சிறிய அளவில் ஆரோக்கியக் குறைவு ஏற்பட வாய்ப்பு உள்ளது. நண்பர்களிடம் எதிர்பார்க்கும் உதவி கிடைக்கும். சிலருக்கு புராதனமான புண்ணிய ஸ்தலங்களுக்குச் செல்லும் வாய்ப்பு உண்டாகும்.

அலுவலகத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை காணப்படும். பணிகளில் உற்சாகமாக ஈடுபடமுடியும். எதிர்பார்க்கும் பதவி உயர்வு, சம்பள உயர்வு போன்ற சலுகைகளை இந்த வாரம் எதிர்பார்க்கலாம்.

வியாபாரத்தில் எதிர்பார்த்த விற்பனையும் லாபமும் கிடைக்கும். வேலையாட்கள் பொறுப்பாக நடந்துகொள்வார்கள். பங்குதாரர்கள் அனுசரணையாக நடந்துகொள்வார்கள்.

கலைத்துறையைச் சேர்ந்தவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் தேடி வரும். வருமானமும் கூடுதலாகக் கிடைக்கும். சிலருக்கு வெளிநாடு செல்லும் வாய்ப்பும் உண்டாகும்.

மாணவ மாணவியர்க்கு அவ்வப்போது தேவையற்ற குழப்பங்கள் ஏற்படும் என்பதால், படிப்பில் கவனம் செலுத்த முடியாத நிலை ஏற்படும். ஆனாலும் பெரிய அளவில் பாதிப்பு எதுவும் இருக்காது.

குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்மணிகளுக்கு குடும்பத்தை நிர்வகிப்பதில் சிரமம் எதுவும் இருக்காது. அலுவலகத்துக்குச் செல்லும் பெண்மணிகளுக்கு அலுவலகத்தில் கிடைக்கும் சலுகைகள் உற்சாகத்தைத் தரும்.

கடகம்:

வருமானம் எதிர்பார்த்தபடி இருக்காது. வெளியில் கடன் வாங்கவேண்டிய சூழ்நிலை ஏற்படக் கூடும். சிறு அளவில் உடல்நலக் குறைவு ஏற்படலாம். உறவினர்கள் வகையில் குடும்பத்தில் சில பிரச்னைகள் தோன்றலாம். மனதில் அடிக்கடி இனம் தெரியாத குழப்பங்கள் ஏற்படலாம். கணவன் – மனைவி இடையில் அந்நியோன்யம் அதிகரிக்கும்.

அலுவலகத்தில் பணிகளைச் சிறப்பாகச் செய்து அதிகாரிகளின் பாராட்டுக்களைப் பெறுவீர்கள். ஒரு சிலருக்கு பதவி உயர்வும் சம்பள உயர்வும் கிடைப்பதற்கு வாய்ப்பு இருக்கிறது.

வியாபாரம் நல்லபடியே நடக்கும். எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். வியாபாரத்தில் முதலிடு செய்வதற்கான வங்கிக் கடனுதவி கிடைக்கும்.

கலைத்துறையைச் சேர்ந்தவர்களுக்கு எதிர்பார்த்தபடியே நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். வருமானமும் திருப்திகரமாக இருக்கும்.

மாணவ மாணவியர்க்கு விரும்பிய பாடப்பிரிவில் இடம் கிடைப்பதால் மகிழ்ச்சி உண்டாகும்.

குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்மணிகளுக்கு பொறுப்புகளை நிறைவேற்றுவதில் சில சிரமங்கள் இருக்கும். வேலைக்குச் செல்லும் பெண்மணிகளுக்கு அலுவலகத்தில் சலுகைகள் எதிர்பார்த்தபடி கிடைக்கும்.

சிம்மம்:

இந்த ராசிக்கார்களுக்கு பணவசதி எதிர்பார்த்ததை விடவும் அதிகமாக இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். சுபநிகழ்ச்சிகளில் கலந்துகொள்வீர்கள். தேவையற்ற செலவுகள் எதுவும் இந்த வாரம் இருக்காது. திருமண முயற்சிகள் சாதகமாகும். தாயாருக்கு சிறிய அளவில் உடல் ஆரோக்கியம் பாதிக்கப்பட்டு மருத்துவச் செலவுகள் ஏற்படக்கூடும்.

அலுவலகத்தில் உங்கள் வேலைகளைச் சிறப்பாகச் செய்து உயர் அதிகாரிகளின் பாராட்டுகளைப் பெறுவீர்கள். பதவி உயர்வு, சம்பள உயர்வு போன்ற சலுகைகள் கிடைப்பதற்கான வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளது.

வியாபாரத்தில் சற்று பிற்போக்கான நிலைமையே காணப்படுகிறது. எதிர்பார்த்தபடி லாபம் கிடைக்கும் என்று சொல்வதற்கில்லை.

கலைத்துறையைச் சேர்ந்த அன்பர்களுக்கு எதிர்பார்த்தபடியே வாய்ப்புகள் கிடைக்கும். எதிர்பாராதபடி வருமானம் அதிகரிக்கும்.

மாணவ மாணவியர்க்கு படிப்பில் ஆர்வம் அதிகரிக்கும். ஆசிரியர்கள் பாடம் நடத்தும்போது கூர்ந்து கவனிப்பீர்கள்.

குடும்ப நிர்வாகத்தை ஏற்றுக்கொண்டுள்ள பெண்மணிகளுக்கு மகிழ்ச்சி தரும் வாரமாக இருக்கும். அலுவலகத்துக்குச் செல்லும் பெண்மணிகளுக்கு அலுவலகச் சூழ்நிலை சந்தோஷம் தருவதாக அமையும்.

கன்னி:

இந்த ராசிக்கார்களுக்கு வருமானம் திருப்திகரமாக இருக்கும். அலுவலகத்திலும் வீட்டிலும் கூடுதலான பொறுப்புகள் ஏற்படும் என்பதால், உடல் அசதியும் சோர்வும் ஏற்படக்கூடும். திருமண முயற்சிகள் பலிதமாகும். உறவினர்கள் அனுசரனையாக இருப்பார்கள். உடல் நலனில் அக்கறை அவசியம். கணவன் – மனைவி இடையில் அந்நியோன்யம் அதிகரிக்கும்.

அலுவலகத்தில் பணிச் சுமை அதிகரிக்கும். சமயத்தில் வேலையை விட்டுவிட நினைப்பீர்கள். வேறு வேலைக்கு முயற்சிக்கலாமா என்றுகூடத் தோன்றும். ஆனால், அவசரப்பட்டு முடிவு எடுக்கவேண்டாம். பொறுமை அவசியம்.

வியாபாரத்தில் மிகவும் எச்சரிக்கையாக இருக்கவேண்டும். வேலையாட்களாலும், பங்குதாரர்களாலும் பிரச்னைகள் ஏற்படக்கூடும். அவசரப்பட்டு எந்த முடிவையும் எடுக்கவேண்டாம்.

கலைத்துறையைச் சேர்ந்த அன்பர்களுக்கு வாய்ப்புகள் கிடைப்பதில் தடைகளும் தாமதமும் உண்டாகும். வயதில் மூத்த கலைஞர்களை அனுசரித்துச் செல்லவும்.

மாணவ மாணவியரைப் பொறுத்தவரை படிப்பில் சிறந்த முன்னேற்றம் ஏற்படக்கூடும். புதிய நண்பர்களின் அறிமுகம் கிடைக்கும்.

குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்மணிகளுக்கு அதிக பொறுப்புகளின் காரணமாக அசதியும் சோர்வும் உண்டாகும். அலு

துலாம்:

இந்த ராசிக்கார்களுக்கு பண வரவு திருப்தி தருவதாக இருக்கும். குடும்பத்தில் சந்தோஷமும் நிம்மதியும் இருக்கும்.ஆனால், சகோதரர்கள் வகையில் சங்கடங்கள் உண்டாகும். புதிய ஆடை ஆபரணங்கள் வாங்கும் யோகம் உண்டாகும். பிரிந்திருந்த கணவன் – மனைவி ஒன்று சேருவர். கணவன் – மனைவி இடையில் அந்நியோன்யம் அதிகரிக்கும்.

அலுவலகத்தில் பணிச் சுமை அதிகரிக்கும். சக பணியாளர்கள் உங்களுடைய பணிகளைப் பகிர்ந்துகொள்வது மனதுக்கு ஆறுதலாக இருக்கும்.

வியாபாரத்தில் எதிர்பார்த்ததை விடவும் விற்பனையும் லாபமும் அதிகரிக்கும். பங்குதாரர்களால் தேவையான உதவிகள் கிடைக்கும்.

கலைத்துறையைச் சேர்ந்தவர்களுக்கு வாய்ப்புகள் எதிர்பார்த்தபடி கிடைக்கும். வாய்ப்புகளைச் சரியாகப் பயன்படுத்திக்கொள்வது அவசியம்.

மாணவ மாணவியர்க்கு மகிழ்ச்சி தரும் வாரமாக இருக்கும். புதிய வகுப்பும், புதிய பாடங்களும் மனதுக்கு உற்சாகம் தருவதாக இருக்கும்.

குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்மணிகளுக்கு பிரச்னை இல்லாத வாரம். செலவுக்குத் தேவையான பணம் கிடைக்கும். வேலைக்குச் செல்லும் பெண்மணிகளுக்கு அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும்.

விருச்சிகம்:

இந்த ராசிக்கார்களுக்கு எதிர்பார்த்ததை விடவும் வருமானம் கூடுதலாகக் கிடைக்கும். வீடு, மனை வாங்கும் முயற்சிகள் சாதகமாகும். கணவன் – மனைவி இடையில் அந்நியோன்யம் அதிகரிக்கும். உறவினர்கள் மற்றும் நண்பர்கள் உதவிகரமாக இருப்பார்கள்.திருமண வயதில் உள்ள மகன் அல்லது மகளுக்கு நல்ல இடத்தில் வரன் அமையும்.

அலுவலகத்தில் சற்று குழப்பமான சூழ்நிலையே காணப்படுகிறது. வேலைகளைச் சிறப்பாகச் செய்தாலும் அங்கீகாரம் கிடைக்கவில்லை என்று ஆதங்கப்படுவீர்கள். ஒரு சிலருக்கு வேறு ஊருக்கு மாற்றல் கிடைக்க வாய்ப்பு இருக்கிறது.

வியாபாரத்தில் எதிர்பார்த்ததைவிடவும் கூடுதல் விற்பனை நடப்பதுடன் லாபமும் அதிகரிக்கும். பணியாளர்களின் ஒத்துழைப்பு சிறப்பாக இருக்கும்.

கலைத்துறையைச் சேர்ந்தவர்களுக்கு வாய்ப்புகள் எதிர்பார்த்தபடியே கிடைக்கும். சில வாய்ப்புகளைச் சரியாகப் பயன்படுத்திக்கொள்ள முடியாதபடி குடும்பச் சூழ்நிலை அமையும்.

மாணவ மாணவியர்க்கு படிப்பில் அவ்வளவாக ஆர்வம் இருக்காது. உடல்நலனும் சிறிய அளவில் பாதிக்கக்கூடும்.

குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்மணிகளுக்கு வீட்டுச் செலவுகளைச் சமாளிப்பது சற்று கடினமாகத்தான் இருக்கும். வேலைக்குச் செல்லும் பெண்மணிகளுக்கு அலுவலகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும்.

தனுசு:

இந்த ராசிக்கார்களுக்கு பணவரவு திருப்தி தரும். குடும்பத்தில் மற்றவர்களால் பிரச்னைகள் ஏற்படக்கூடும் என்பதால் குடும்ப விஷயத்தில் மற்றவர்களைத் தலையிட அனுமதிக்கவேண்டாம். கணவன் – மனைவி ஒருவருக்கு ஒருவர் அனுசரித்துச் செல்வது நல்லது. ஒரு சிலருக்கு புண்ணிய தலங்களுக்குச் செல்லும் வாய்ப்பு உண்டாகும்.

வேலைக்குச் செல்லும் அன்பர்களுக்கு அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும். அதனால் மனதில் சோர்வு உண்டாகும்.ஒரு சிலருக்கு சிறிய அளவில் உடல் ஆரோக்கியம் பாதிக்கப்படும்.

வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் எதிர்பார்த்ததை விடவும் கூடுதலாக இருப்பது மகிழ்ச்சி தரும். பங்குதாரர்களின் ஒத்துழைப்பு உங்களுக்கு ஆறுதல் தரும்.

கலைத்துறையைச் சேர்ந்தவர்களுக்கு ஓரளவுக்கு வாய்ப்புகள் கிடைக்கும். சக கலைஞர்களிடம் பக்குவமாகப் பழகுவது பிரச்னைகளைக் குறைக்கும்.

மாணவ மாணவியர்க்கு படிப்பில் கவனம் செலுத்தமுடியாத நிலை ஏற்படும். மனதில் சோர்வு உண்டாகும்.

குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்மணிகளுக்கு குடும்பப் பொறுப்புகள் அதிகரிப்பதால் மன அமைதி குறையும். வேலைக்குச் செல்லும் பெண்மணிகளுக்கு அலுவலகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைப்பது தாமதமாகும்.

மகரம்:

இந்த ராசிக்கார்களுக்கு வருமானம் திருப்திகரமாக இருக்கும். வீண் செலவுகள் எதுவும் ஏற்படாது. கடன்கள் விஷயத்தில் கவனமாக இருப்பது அவசியம் வயிறு சம்பந்தமான பிரச்னைகள் ஏற்படக்கூடும் என்பதால் உணவு விஷயத்தில் கட்டுப்பாட்டுடன் இருப்பது நல்லது. வழக்குகளில் சாதகமான தீர்ப்பு கிடைக்கும். கணவன் – மனைவி இடையில் அந்நியோன்யம் அதிகரிக்கும்.

அலுவலகத்தில் பணிச் சுமை அதிகரிக்கும். சக பணியாளர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும் என்று சொல்லமுடியாது. உங்கள் பணிகளை நீங்களே முடிப்பது நல்லது. சலுகைகள் கிடைப்பதில் தாமதம் உண்டாகும்.

வியாபாரத்தில் கடுமையாகப் பாடுபடவேண்டி இருக்கும். பணியாட்களால் பிரச்னைகள் ஏற்படக்கூடும். பங்குதாரர்களை அனுசரித்துச் செல்வது நல்லது.

கலைத்துறையைச் சேர்ந்தவர்களுக்கு எதிர்பார்த்தபடி வாய்ப்புகள் கிடைப்பதில் தடை தாமதம் ஏற்படும். எதிர்பார்த்தபடி வருமானம் கிடைப்பதில் பிரச்னை இருக்காது.

மாணவ மாணவியர்க்கு படிப்பில் ஆர்வம் அதிகரிக்கும். ஆசிரியர்களின் பாராட்டுகள் மனதுக்கு மகிழ்ச்சி தரும்.

குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்மணிகளுக்கு மகிழ்ச்சியான வாரமாக இருக்கும்.வேலைக்குச் செல்லும் பெண்மணிகளுக்கு பணிச் சுமை அதிகரிக்கும். எதிர்பார்த்த சலுகைகள் கிடைப்பது தாமதமாகும்.

கும்பம்:

இந்த ராசிக்கார்களுக்கு பண வரவு திருப்திகரமாக இருக்கும். உடல் நலம் சீராகும். வாழ்க்கைத் துணையின் உடல் ஆரோக்கியத்தில் அக்கறை அவசியம். திருமண வயதில் உள்ள மகன் அல்லது மகளுக்கு வரன் தேடும் முயற்சியை இந்த வாரம் மேற்கொள்ளலாம். உறவினர்களுடன் கருத்து வேறுபாடுகள் தோன்றக்கூடும் என்பதால், பொறுமையைக் கடைப்பிடிக்கவும்.

அலுவலகத்தில் வேலைச் சுமை அதிகரிக்கும். ஆனாலும், அதிகாரிகளின் பாராட்டுகள் மனதுக்கு மகிழ்ச்சி தரும். ஆனாலும் எதிர்பார்க்கும் சலுகைகள் கிடைப்பது தாமதமாகும்.

வியாபாரம் சுமாராகத்தான் இருக்கும். கடையை வேறு இடத்துக்கு மாற்றும் முயற்சி நல்லபடி முடியும். பங்குதாரர்களை அனுசரித்துச் செல்லவும்.

கலைத்துறை அன்பர்களுக்கு கிடைக்கக்கூடிய வாய்ப்புகளைத் தவறாமல் பயன்படுத்திக் கொள்வது அவசியம். சக கலைஞர்களுடன் பக்குவமாகப் பழகுவது எதிர்காலத்துக்கு நல்லது.

மாணவ மாணவியர்க்கு படிப்பில் ஆர்வம் அதிகரிக்கும். ஆசிரியர்கள் பாடம் நடத்தும்போது கவனமாகக் கேட்பது அவசியம்.

குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்மணிகளுக்கு ஓரளவுக்கு மன நிம்மதி தரும் வாரம். வேலைக்குச் செல்லும் பெண்மணிகளுக்கு அலுவலகத்தில் வேலைச் சுமை அதிகரிக்கும்.

மீனம்:

இந்த ராசிக்கார்களுக்கு பணவரவு தாரளமாக இருக்கும் கடன்கள் விஷயத்தில் கவனம் தேவை. திருமண வயதில் உள்ளவர்களுக்கு நல்ல இடத்தில் வரன் அமையும். முன்பின் தெரியாதவர்களிடம் குடும்ப விஷயங்களை சொல்லவேண்டாம். கணவன் – மனைவி இடையில் அந்நியோன்யம் அதிகரிக்கும். பிரிந்திருந்த கணவன் – மனைவி ஒன்று சேருவர்.

அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும். அதனால் உடல் அசதியும் சோர்வும் உண்டாகும். சக பணியாளர்கள் உங்கள் பணிகளில் உதவியாக இருப்பார்கள்.

வியாபாரத்தில் சில பிரச்னைகளைச் சமாளிக்கவேண்டி இருக்கும். பணியாளர்களிடம் தேவையான ஒத்துழைப்பை எதிர்பார்க்கமுடியாது. பங்குதாரர்களிடம் பக்குவமாக நடந்துகொள்ளவும்.

கலைத்துறையைச் சேர்ந்தவர்களுக்கு வாய்ப்புகள் கிடைத்தாலும் உடல் நிலை காரணமாக வாய்ப்புகளைப் பயன்படுத்தமுடியாமல் போகும்.

மாணவ மாணவியர்க்கு படிப்பில் ஆர்வம் உண்டாகும். ஞாபக சக்தி அதிகரிக்கும். ஆசிரியர்களின் பாராட்டுதல்கள் கிடைக்கும்.

குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்மணிகளுக்கு ஓரளவு நிம்மதி தருவதாக அமையும். அலுவலகத்தில் இறுக்கமான சூழ்நிலை காணப்படும். பொறுமையாக இருப்பது அவசியம்.