தமிழகத்தில் சென்னை நெசப்பாக்கம் எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்தவர்கள் கார்த்திகேயன் – மஞ்சுளா. இவர்களுக்கு ரித்திஷ் சாய் என்ற மகன் உள்ளான். மஞ்சுளா மின்வாரியத்தில் பொறியாளராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் சிறுவன் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளான்.
சேலையூரில் புதிதாக கட்டப்பட்டு வரும் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் இருந்து ரித்திஷ் சாயின் உடலை காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர். சிறுவனின் உடலில் பீர் பாட்டிலால் கழுத்து அறுக்கப்பட்டும், இரும்பு கம்பியால் தலையில் தாக்கப்பட்டும் இறந்துள்ளான் என்பதை தெரிவித்துள்ளனர்.
காவல்துறை நடத்திய விசாரணையில் நாகராஜன் என்பவன் இந்த கொலையை செய்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சிறுவனின் தாயார் மஞ்சுளாவுக்கும் நாகராஜனுக்கும் தகாத உறவு இருந்ததுள்ளது. இது குறித்து கணவர் கார்த்திகேயனுக்கு தெரியவந்ததை அடுத்து, கடந்த 4 மாதங்களுக்கு முன்பு போலீஸ் நிலையத்தில் புகார் செய்து நாகராஜனை ஜெயிலுக்கு அனுப்பியுள்ளனர்.
இதனால் மனமுடைந்த நாகராஜன், கார்த்திகேயனை பழிவாங்க சிறுவன் ரித்தேஷ் சாயை கொலை செய்ய முடிவு செய்த நாகராஜன் இந்தி டியூசன் வகுப்பில் இருந்து அழைத்துக் கொண்டு சென்றுள்ளான். சேலையூரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புக்கு அழைத்து சென்று சிறுவனை கொலை செய்து வேலூருக்கு தப்பிச் சென்றுள்ளான். கார்த்திகேயன் கொடுத்த புகாரின் பேரில் நாகராஜனை கைது செய்துள்ள காவல்துறையினர் தாய் மஞ்சுளாவையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.