இந்திய அதிரடிப்படைக்கு ஆட்டம் காட்டிய மகிந்த ராஜபக்ஷ -வீடியோ..

இரண்டு நாள் சுற்றுப்பயணமாக நேற்று முன் தினம், திருப்பதிக்கு சென்ற மகிந்த ராஜபக்‌ஷ நேற்று(1)காலை வி.ஐ.பி தரிசனத்தில் ஏழுமலையானை தரிசித்தார்.பெங்களூரில் இருந்து  சிறப்பு விமானத்தில் ரேனிகுண்டா விமான நிலையத்திற்கு சென்ற மகிந்த அங்கிருந்து கார் மூலம் திருப்பதி மலைக்கு சென்றுள்ளார்.

இதேவேளை இந்தியா அவருக்கு அதிரடிப் படை பாதுகாபு கொடுத்துள்ளது. வேட்டியோடு சென்று ஆட்டம் காட்டிய மகிந்த. சிறிய காரில் ஏறி உட்கார்ந்து தன்னோடு பாதுகாப்பு படையை அழைத்துச் செல்லவில்லை. இதனால் அவரது கார் நகர, அவருக்கு பின்னால் இந்திய அதிரடிப்படையினர் ஓடி ஓடி செல்லவேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

இந்திய வீரர்களுக்கு இந்த கெதியா ? ஒரு போர் குற்றவாளிக்கு அதிரடிப்படை பாதுகாப்பு கொடுத்த முதல் நாடு இந்தியாவாக தான் இருக்க முடியும்.