நாட்டில் ஜனாதிபதியாக மகிந்த இல்லாத காரணத்தால் தான், லண்டனில் பைத்தியங்கள் நடனமாடுகிறார்கள் என்று கொழும்பு ஏர்போட்டில் வைத்து கோட்டபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். அமெரிக்கா சென்று மீண்டும் இலங்கை திரும்பியுள்ள கோட்டபாய ராஜபக்ஷவுக்கு, கொழும்பு விமான நிலையத்தில் பெரும் வரவேற்ப்பு கொடுக்கப்பட்டது. இனி மகிந்த ஜனாதிபதியாக போட்டியிட முடியாது என்ற நிலையில். அவர் அமைத்துள்ள கட்சியின் வேட்பாளராக அவர் கோட்டபாயவை நிறுத்தி, அடுத்த தேர்தலில் மீண்டும் ஆட்சியை கைப்பற்றுவார் என்பது தற்போது தெளிவாகப் புரிகிறது.
இன் நிலையில் அடுத்த ஜனாதிபதியாக கோட்டபாய அல்லது நமால் வரக் கூடும் என்ற நிலை தோன்றியுள்ளது. இதனை அடுத்து மீடியாக்களின் கவனம் அவர் மேல் திரும்பியுள்ள நிலையில். அவரை கொழும்பு கட்டநாயக்க ஏர்போட்டில் வைத்து ஊடகவியலாளர் கேள்விகளை எழுப்பி இருந்தார்கள். இதற்கு பதில் கூறுகையில். மகிந்த ஆட்சியில் இருந்தால், லண்டன் போன்ற சர்வதேச நாடுகளில் பைத்தியங்கள் ஆடமாட்டார்கள் என்றும், பாதிக்கப்பட்ட ஒரு நபரின் செயலே இந்த கழுத்து வெட்டு சைகை சம்பவம் என்றும் அவர் கூறியுள்ளார்.
அதாவது கழுத்தை வெட்டுவேன் என்று சைகை காட்டிய பிரிகேடியர் பாதிக்கப்பட்டுள்ளாராம்…
இவ்வாறு இச்செயலை நியாயப்படுத்தி கோட்டபாய பேசியுள்ளதோடு. என்மீதான விசாரணைகள் ஒவ்வொரு நாளும் தான் இடம்பெற்று வருகின்றன. இது வாயுடைந்தவர்களின் செயற்பாடு. அவன்கார்ட்டுக்கும் எனக்கும் எவ்வித தொடர்பும் இல்லை. அவ்வாறு எதுவும் இருந்தால் அதனை வெளிப்படுத்த வேண்டும்.எவ்வித குற்றங்களுமில்லாது 70 ஆவது பிரிவின் கீழ் ஊழல் மோசடி தொடர்பில் பொறுப்புக் கூறுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆணைக்குழு முதலில் தெரிந்துகொள்ள வேண்டும் அவன்கார்ட் என்பது என்னவென்று. ஆணைக்குழுவினருக்குக் கூடத் தெரியவில்லை நான் கடந்தகாலங்களில் என்ன செய்தேனென, நான் செய்தது நாட்டில் தொழில் வாய்ப்புக்களை ஏற்படுத்தியது வெளிநாட்டு தொடர்புளை ஏற்படுத்தியது என அவர் மேலும் தெரிவித்தார்.