அம்பாறை மாவட்டத்தில் ஒரு காலத்தில் முஸ்லீம்கள் ஆதிக்கம் செலுத்தி வந்தார்கள். ஆனால் இன்று அங்கே முஸ்லீம்களை காண்பதே அரிதாகிவிட்டது. காரணம் சிங்களவர்கள் அங்கே குடியேறி. முஸ்லீம்களை ஓரம் கட்டி விட்டார்கள். இன் நிலையில் அங்கே ஒரு சாப்பாட்டு கடை உண்டு. இதனை முஸ்லீம் இனத்தவர் நடத்தி வந்தார். எஞ்சியுள்ள தமிழ் முஸ்லீம்கள் அங்கே சென்று சாப்பிடுவது வழக்கம். நல்ல சுத்தமான பாய் கடை. இதனால் ஆத்திரமடைந்த சிங்கள இளைஞர்கள்.
அதனை அடித்து நொருக்க ரூம் போட்டு திட்டம் போட்டுள்ளார்கள். எப்படி ஆரம்பிப்பது ? எங்கே இருந்து ஆரம்பிப்பது என்று திட்டம் போட்டு 6 பேராகச் சென்று அங்கே பிரியாணி வாங்கி சாப்பிட்டு விட்டு. அதில் ஏதோ மருந்து கலந்திருப்பதாக கூறி. வேலை செய்யும் முஸ்லீம்களை பிடித்து அடித்துள்ளார்கள். தாங்கள் கொண்டு சென்ற ஒருவகை மருந்தை கடையில் இருந்து எடுப்பது போல சினிமா பாணியில் எடுத்து, இது ஆண்களுக்கு ஆண்மையை இழக்கச் செய்யும் மருந்து என்றும். பெண்கள் பாவித்தால் கரு கலையும் என்றும் கூறவே.
ஏன் அடிக்கிறோம் எதற்கு அடிக்கிறோம் என்று தெரியாத அவ்வூர் மோட்டு சிங்களவர்கள், கடையை அடித்து நொருக்கியுள்ளார்கள். ஒரு வழியாக கடையை உடைத்து செயல் இழக்க செய்துவிட்டார்கள். ஆனால் சிங்கள மருத்துவர்கள் சிலர், இப்படியான மருந்து இதுவரை கண்டுபிடிக்கப்படவே இல்லை. அதுவும் ஆணுக்கும் பெண்ணுக்கும் சேர்ந்து இவ்வாறு செயல்படும் மருத்து இல்லவே இல்லை என்று யூரியூப்பிலும், பேஸ் புக்கிலும் கருத்து தெரிவித்து வருகிறார்கள். இனி என்ன பிரயோசனம் ? சிங்களவர்களின் பிறப்பு எண்ணிக்கையை குறைக்கவே முஸ்லீம்கள் இவ்வாறு செய்கிறார்கள் என்று அம்பாறை சிங்களவர்கள் புதுக் கதையை அளந்து வருகிறார்கள். இதற்குப் பின்னால் மகிந்த கும்பல் உள்ளதாக தகவல்…அதுவே உண்மையும் கூட…