கடைசி நிமிடத்தில் திருமணத்தை நிறுத்திய மணப்பெண்…

இந்தியாவில் புதுடெல்லியில் திருமணம் நடக்கிவிருக்கும் கடைசி நேரத்தில் மணமகனின் தலையில் வழுக்கை இருப்பதை பார்த்த மணபெண் திருமணத்தை நிறுத்தியுள்ளார்.

புதுடெல்லியை சேர்ந்தவர் ரவிகுமார். மருத்துவரான இவருக்கு அவர் வசிக்கும் பகுதியிலிருந்து கொஞ்சம் தூரத்தில் உள்ள இடத்தில் வசிக்கும் பெண்ணுடன் திருமணம் நிச்சயம் செய்யப்பட்டது.

ரவிகுமாரை அவரின் வருங்கால மனைவி நேரில் பார்க்காத நிலையில் போட்டோவில் மட்டுமே பார்த்துள்ளார்.இந்நிலையில் ஏற்கனவே முடிவு செய்தபடி சமீபத்தில் இருவருக்கும் திருமணம் நிகழ்வு நடைபெற்றது.

அப்போது ரவிகுமார் தனது தலையில் அவர்கள் குடும்ப வழக்கப்படி தலைபாகை அணிந்திருந்தார்.அவர் தலைபாகையை கழற்றிய போது மணப்பெண் அதிர்ச்சியடைந்தார்.

காரணம் அவர் தலை வழுக்கையாக இருந்துள்ளது. இதையடுத்து ரவிகுமாரை திருமணம் செய்ய முடியாது என மறுத்த மணப்பெண் அங்கிருந்து வெளியேறியுள்ளார்.இதை பார்த்து அங்கிருந்த அனைவரும் அதிர்ச்சியடைந்தனர்.

ஆனால் திருமணம் ஆகாமல் தனது வீட்டு பகுதிக்கு சென்றால் அவமானம் என கருதிய ரவிகுமார் தனது தந்தையின் மூலம் ஏழை காய்கறி வியாபாரி ஒருவரிடம் பேசி அவர் மகளை அடுத்த இரண்டு நாட்களுக்கு பின்னர் கோவிலில் வைத்து எளிமையாக திருமணம் செய்து கொண்டுள்ளார்.