இலைகளை சாப்பிட்டு உயிர் வாழும் அதிசய மனிதர்…

பாகிஸ்தான் பஞ்சாப் மாநிலம் குஜ்ரன் வாலா மாவட்டத்தை சேர்ந்தவர் மெக்மூத் பட் என்பவர் கடந்த 25 ஆண்டுகளாக இவர் உணவு வகைகளை சாப்பிடாமல். அதற்கு மாறாக மரங்கள் மற்றும் இலை தழைகளை சாப்பிட்டு உயிர்வாழ்ந்து வருகிறார்.

இவர், தனது உழைப்பின் மூலம் தினமும் ரூ.600 சம்பாதித்து வருகிறார். இருந்த போதிலும், இவருக்கு விதம் விதமான உணவு பண்டங்கள் மீது நாட்டம் இல்லையாம்.

இது குறித்து அவர் கூறுகையில், 25 வயதில் நான் வறுமையில் வாடினேன். வேலை எதுவும் கிடைக்கவில்லை. எனவே சாப்பிட்டிற்கு வழியின்றி பட்டினி கிடந்தேன்.

அப்போது இலை தழைகளை தின்று பசி ஆறினேன். அதுவே எனக்கு பழக்கமாகி விட்டது. இப்போது பசி எடுக்கும் போது இலை தழைகளை சாப்பிட்டு உயிர் வாழ்கிறேன் என்றார்.