ஸ்ரீதேவியின் வீட்டில் கடைசி 24 மணிநேரம் என்ன நடந்தது என்று தெரிய வந்துள்ளது. துபாயில் நடந்த திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்ள சென்ற நடிகை ஸ்ரீதேவி மதுபோதையில் குளியல் தொட்டியில் விழுந்து நீரில் மூழ்கி உயிர் இழந்தார்.
அவரின் உடல் மும்பை வந்தபோது அவரின் வீட்டில் நடந்ததை பார்த்த ஒருவர் செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.
ஸ்ரீதேவியின் வீட்டில் இருந்து அழுகை சத்தம் வந்து கொண்டே இருந்தது.
கபூர் குடும்பத்தின் பாசத்தை தான் ஸ்ரீதேவி விரும்பினார். அந்த பாசம் அவருக்கு கிடைத்தது.
ஸ்ரீதேவியின் இறுதிப்பயணம் ஸ்பெஷலாக இருக்க வேண்டும் என்பதில் கபூர் குடும்பத்தினர் மிகுந்த அக்கறை செலுத்தினார்கள்.
போனி கபூரின் தம்பி அனில் கபூர் மனைவியின் சகோதரி பூனம் வீட்டை மலர்களால் அலங்கரித்தார். ஸ்ரீதேவி உயிருடன் இருந்தபோது வேலைக்காரர்களிடம் அவ்வளவாக பேசியது இல்லை.
இருப்பினும் அனைவரும் அழுகையும், கண்ணீருமாக இருந்தனர்.
இயக்குனரும், தயாரிப்பாளருமான ஆதித்யா சோப்ராவின் ஒய்.ஆர்.எப். பிலிம்ஸ் ஸ்ரீதேவியின் உடல் தகனம் செய்யப்பட்ட தேவையான ஏற்பாடுகளை செய்தது.
ஸ்ரீதேவியின் நண்பரான ஆடை வடிவமைப்பாளர் மனிஷ் மல்ஹோத்ரா அவரின் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்ட கிளப்பில் பூ அலங்காரம் செய்தார்.
அந்த அலங்காரத்திற்காக அவர் லட்சக்கணக்கில் செலவு செய்துள்ளார்.