-
மேஷம்
மேஷம்: சமயோஜிதமாக பேசி காரியம் சாதிப்பீர்கள். பழைய உறவினர், நண்பர்களை சந்திப்பீர்கள். அரசால் அனுகூலம் உண்டு. வழக்கில் வெற்றி பெறுவீர்கள். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். உத்யோகத்தில் உயரதிகாரிகள் தொடர்ந்து உங்களுக்கு முக்கியத்துவம் தருவார்கள். திடீர் யோகம் கிட்டும் நாள்.
-
ரிஷபம்
ரிஷபம்: புதிய திட்டங்கள் தீட்டுவீர்கள். பிள்ளைகளின் உயர்கல்வி, உத்யோகம் குறித்து யோசிப்பீர்கள். சிக்கனமாக செலவழித்து சேமிக்க தொடங்குவீர்கள். நட்பு வட்டம் விரியும். வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உத்யோகத்தில் புது சலுகைகள் கிடைக்கும். கனவு நனவாகும் நாள்.
-
மிதுனம்
மிதுனம்: தடைகளையும் தாண்டி முன்னேறுவீர்கள். வெளியூர் பயணங்களால் அலைச்சல் இருந்தாலும் புது அனுபவம் உண்டாகும். நவீன சாதனங்கள் வாங்குவீர்கள். தாயாருடன் வீண் விவாதம் வந்து போகும். தொழிலில் லாபம் அதிகரிக்கும். உத்யோகத்தில் சக ஊழியர்களால் நிம்மதி கிட்டும். உழைப்பால் உயரும் நாள்.
-
கடகம்
கடகம்: குடும்பத்தாரின் எண்ணங்களை கேட்டறிந்து பூர்த்தி செய்வீர்கள். அரசால் ஆதாயம் உண்டு. சொத்து வாங்குவது, விற்பது லாபகரமாக அமையும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் நம்பிக்கையைப் பெறுவீர்கள். உத்யோகத்தில் உங்கள் உழைப்பிற்கு பாராட்டுக் கிட்டும். தைரியம் கூடும் நாள்.
-
சிம்மம்
சிம்மம்: கடந்த இரண்டு நாட்களாக கணவன்-மனைவிக்குள் இருந்த மோதல்கள் விலகும். பணவரவு திருப்தி தரும். எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்தி வரும். உறவினர்கள் ஒத்துழைப்பார்கள். வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாகும். உத்யோகத்தில் திருப்தி உண்டாகும். நிம்மதியான நாள்.
-
கன்னி
கன்னி: ராசிக்குள் சந்திரன் நுழைந்திருப்பதால் வேலைசுமை இருந்துக் கொண்டேயிருப்பதாக ஆதங்கப்படுவீர்கள். குடும்பத்தில் சண்டை, சச்சரவு வந்து போகும். வியாபாரத்தில் வேலையாட்களால் விரயம் வரும். உத்யோகத்தில் அதிகாரிகளிடம் வளைந்து கொடுத்து போவது நல்லது. பதறாமல் பக்குவமாக செயல்பட வேண்டிய நாள்.
-
துலாம்
துலாம்: எளிதில் முடித்து விடலாம் என நினைத்த காரியங்கள் கூட இழுபறியில் போய் முடியும். சகோதரங்களுடன் ஆரோக்யமான விவாதங்கள் வந்து போகும். எதிர்பார்த்த உதவிகள் தாமதமாக கிடைக்கும். வியாபாரத்தில் கடினமாக உழைத்து லாபம் பெறுவீர்கள். உத்யோகத்தில் பணிகளை போராடி முடிப்பீர்கள். நிதானம் தேவைப்படும் நாள்.
-
விருச்சிகம்
விருச்சிகம்: கடந்த கால இனிய அனுபவங்களை நினைவுகூர்ந்து மகிழ்வீர்கள். உடன்பிறந்தவர்கள் பக்கபலமாக இருப்பார்கள். வியாபாரத்தில் புது தொழில் தொடங்கும் முயற்சி வெற்றி அடையும். உத்யோகத்தில் அதிகாரிகள் உங்களை மதித்துப் பேசுவார்கள். சிறப்பான நாள்.
-
தனுசு
தனுசு: உங்கள் பிடிவாதப் போக்கை கொஞ்சம் மாற்றிக் கொள்வீர்கள். பிள்ளைகளை புதிய பாதையில் வழி நடத்துவீர்கள். பிரபலங்கள் உதவுவார்கள். மற்றவர்களுக்காக சில பொறுப்புகளை ஏற்பீர்கள். வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும். உத்யோகத்தில் சக ஊழியர்களால் ஆதாயம் உண்டு. புதிய பாதை தெரியும் நாள்.
-
மகரம்
மகரம்: கடந்த இரண்டு நாட்களாக குடும்பத்தில் இருந்து வந்த கூச்சல், குழப்பங்கள் நீங்கி மகிழ்ச்சி தங்கும். எதிர்பாராத இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும். விலகி சென்றவர்கள் விரும்பி வருவார்கள். வியாபாரத்தில் லாபம் வரும். உத்யோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். மனசாட்சி படி செயல்படும் நாள்.
-
கும்பம்
கும்பம்: சந்திராஷ்டமம் தொடங்குவதால் ஒருவித படபடப்பு வந்து செல்லும். குடும்பத்தாரின் விருப்பங்களை நிறைவேற்ற போராட வேண்டியிருக்கும். அடுத்தவர்களை குறைகூறுவதை நிறுத்துங்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களால் பிரச்னைகள் வரும். உத்யோகத்தில் ஈகோ அதிகரிக்கும். பொறுமைத் தேவைப்படும் நாள்.
-
மீனம்
மீனம்: தன்னம்பிக்கையுடன் எதையும் செய்யத் தொடங்குவீர்கள். பிள்ளைகள் கேட்டதை வாங்கி தருவீர்கள். கல்யாண முயற்சிகள் பலிதமாகும். மனைவிவழியில் நல்ல செய்தி உண்டு. வியாபார ரீதியாக சில முக்கியஸ்தர்களை சந்திப்பீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களுக்கு உதவுவீர்கள். எதிர்பாராத நன்மை கிட்டும் நாள்.