எதிர்வரும் ஆண்டு நிலவில் 4ஜி இணைய சேவையை வழங்க வோடபோன் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.1972-ல் நிலவுக்குச் சென்ற நாசாவின் அப்போலோ 17 லூனார் ஊர்தியை ஆய்வு செய்வது உள்ளிட்ட பல பணிகளில் ஆடி லூனார் க்வார்ட்ரோ ஊர்தி ஈடுபட்டு வருகிறது.அதன் உதவியோடு நிலவில் இருந்து அறிவியல் சார்ந்த தகவல்களையும், HD தரத்திலான காணொளியினையும் ஒரு இணைப்பின் மூலம் உலகில் உள்ளோருக்கு ஒளிபரப்ப விஞ்ஞானிகள் திட்டமிட்டுள்ளனர்.இதற்காக நிலவில் முதன் முறையாக தனியார் இணைய சேவை வழங்கும் தங்கள் நிறுவனத்தின் 4ஜி நெட்வொர்க் சேவை பயன்படுத்தப்படவுள்ளதாக வோடபோன் தெரிவித்துள்ளது.
தொழில்நுட்பபங்குதாரராக நோக்யாவும் தங்களுடன் பணியாற்ற இருப்பதாக அந்நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.