தமிழகத்தில் சுடுகாட்டில் வேலை செய்து வரும் திருநங்கை ஒருவர் மனிதர்களை பார்த்தால் பயமாக இருக்கிறது என்று கூறியுள்ளார்.
கோயமுத்தூர் மாவட்டம் சொக்கம் புதுார் மயானத்தில் வேலை செய்து வருபவர் அட்சயா(21).
திருநங்கையான இவர் ஒன்பதாம் வகுப்பு படிக்கின்ற போது, தன்னுடன் ஏற்படும் மாற்றத்தை கண்டு, அதன் பின் திருநங்கையானதை உறுதிபடுத்திக் கொண்டார்.
இவர் திருநங்கையானதால், பள்ளியில் உள்ளவர்கள் கிண்டல் செய்ய, ஆசிரியர்களும் ஒரு ஏளமனமாய பார்த்ததால் பள்ளிப் படிப்பை அப்போதே நிறுத்திவிட்டார்.
திருநங்கை என்பதால், தங்களுக்கு குடும்ப கெளரவம் தான் பெரிது என்று கூறி, அவரை சொல்லாத வார்த்தைகளால் சொல்லி பெற்றோர் மற்றும் சகோதரர்கள் சொந்த வீட்டிலேயே தனியாக தூங்க வைத்துள்ளனர்.
அவர் காது படும் படியே இறந்து போக வேண்டிதானே என்று கூறியுள்ளனர்.
இதனால் முடிவெடித்த இவர் தற்கொலைக்கு முயன்றுள்ளார். ஆனால் அதுவும் தோல்வியில் முடிய, இறுதியாக வீட்டை விட்டு வெளியே வந்தார்.
வெளியே வந்த அவர் பசியை போக்குவதற்காக வேலை கேட்ட போது, அவர்கள் அனைவரும் முதலில் உடலில் இருக்கும் பசியை நீக்கும் படி கூறியுள்ளனர்.
இப்படி சதைக்காக ஆசைப்படும் கொடூர மனிதர்களைக் கண்டு பயந்து சுடுகாட்டில் தஞ்சமடைந்துள்ளார். அங்கேயும் சிலர் குடித்துவிட்டு இவரை விரட்டியுள்ளனர். அப்போது வைரமணி என்ற பெண் காப்பாற்றியுள்ளார்.
இதையடுத்து சுடுகாட்டிற்கு வரும் பிணங்களை எரிப்பதும்,புதைப்பதுமான வேலை செய்து வந்த வைரமணியுடன், அட்சயா உதவியாக இருந்துள்ளார்.
தொடர்ந்து அவருடன் இருந்து வந்தால் இரண்டு வரு அனுபவத்திற்கு பிறகு தற்போது அவரே தனியாக சுடுகாட்டிற்கு வரக்கூடிய பிணங்களை எரிக்கவும் புதைக்கவும் செய்கிறார்.
இது குறித்து அட்சயா கூறுகையில், எந்த நேரத்தில் பிணம் வந்தாலும் எரிப்பதற்கு தயராக இருப்பேன்.பிணத்தைக் கண்டு நான் எப்போதுமே பயந்தது இல்லை, எனது பயம் அனைத்தும் என்னை வேட்டையாட துடிக்கும் மனிதர்களைப் பார்த்துதான் என்று கூறியுள்ளார்.