குளியல் அறைக்குள் புகுந்து பெண்ணொருவரை வல்லுறவுக்கு உட்படுத்த முயன்ற பிக்கு : பொலிஸாரிடம் சிக்கினார்

வீட்டில் குளியல் அறையில் குளித்துக்கொண்டிருந்த பெண்னொருவரை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்த முயற்சித்ததாக அந்த வீட்டுக்கு அருகிலுள்ள விகாரையொன்றை சேர்ந்த பிக்கு ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கேகாலை புவக்தெனிய பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

குறித்த பெண் குளித்துக்கொண்டிருந்த போது 42 வயதுடைய அந்த பிக்கு அந்த வீட்டுக்கு சென்றுள்ளதுடன் அதன்போது குளியல் அறைக்குள் நுழைந்து அந்த பெண்ணை வல்லுறவுக்கு உட்படுத்த முயற்சித்த போது அந்த பெண் அவரிடமிருந்து விடுபட்டு அது தொடர்பாக வீட்டாருக்கு அறிவித்துள்ளார்.

இதன்போது அந்த பிக்கு தான் அணிந்திருந்த காவி உடை குளியல் அறையிலேயே அவிழ்ந்து விழுந்துள்ளதுடன் வெளியே கொடியொன்றில் காய்ந்துக்கொண்டிருந்த பெண்கள் அணியும் காற்சட்டையொன்றை அணிந்துக்கொண்டு அங்கிருந்து சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த சம்பவம் தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார் குளியல் அறையிலிருந்து பிக்குவின் காவி உடையை எடுத்துள்ளதுடன் விகாரையிலிருந்து காற்சட்டையை எடுத்துள்ளனர். இதனை தொடர்ந்து சந்தேகத்தில் பிக்குவை கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.