நீர் தேக்கம் அல்லது நீர் கட்டு என்பது ஒடிமா என்ற பெயரில் அழைக்கப்படுகிறது. இந்த நிலையில் நமது உடலில் உள்ள செல்களுக்கு வெளிப்புறத்தில் உள்ள சுவருக்கு இடையை நீர் தேங்கி கொள்ளும். நீர் வற்றாமல் அந்த இடம் வீங்க தொடங்கி விடும். தொடர்ச்சியை கீழே கீழே வாசியுங்கள்…
இந்த பிரச்சினை பொதுவாக அழற்சி அல்லது கிருமிகள் தொற்றால் ஏற்படுகிறது. ஆனால் சில பேருக்கு எந்த வித நோய் தொற்றும் இல்லாமல் கூட ஏற்படுகிறது. எடுத்துக்காட்டாக டயாபெட்டீஸ் நோயாளிகளுக்கு, கருவுற்ற தாய்மார்களுக்கு இது போன்று நீர் தேக்கம் ஏற்படுகிறது. அதே மாதிரி நீண்ட நேரம் பயணம் மேற்கொள்ளும் போது ஓரே இடத்தில் இருப்பது கால்களில் உள்ள இரத்தக் குழாயான சிரைகளில் வீக்கத்தை ஏற்படுத்துகிறது.
நீர் கட்டுகளை எப்படி அறிவது
கால்களில் தான் இந்த மாதிரியான பிரச்சினை பெரும்பாலும் ஏற்படுகிறது. இதனால் உங்கள் கால்களில் உள்ள தசைகள் ஆக்ஸிஜனேற்றம் செய்யப்படாத இரத்தத்தை கால்களிலிருந்து இதயத்திற்கு எடுத்துச் செல்ல மிகவும் சிரம்பப்படுகிறது. இதே போன்று மற்ற பகுதிகளிலும் இந்த பிரச்சினை ஏற்பட வாய்ப்புள்ளது.
உங்களுக்கு சில இடங்களில் இது போன்ற அறிகுறிகள் தென்பட்டால் அது நீர் தேக்க பிரச்சினையா அல்லது கொழுப்பின் தேக்கமா என்பதை சில முறைகளை கொண்டு கண்டறியலாம்.
உங்கள் பெருவிரலை பாதிக்கப்பட்ட இடத்தில் அழுத்தி 2-3 நிமிடங்கள் அப்படியே வைத்து இருக்க வேண்டும். பிறகு அழுத்தத்தை விடுவித்து மெதுவாக பெருவிரலை எடுக்க வேண்டும்
அந்த பகுதி மறுபடியும் பழைய நிலைக்கு ஸ்பிரிங் மாதிரி வந்து மிகவும் மென்மையாக மாறி விட்டால் அது ஒடிமா கிடையாது. ஆனால் பழைய நிலைக்கு வர 2-3 நிமிடங்கள் எடுத்து கொண்டால் கண்டிப்பாக அது நீர் தேக்கம் தான்.
இதற்கு சில வீட்டு வைத்தியங்களை கொண்டே இதை எளிதில் சரி செய்து விடலாம்.
நசுக்கிய வெள்ளை பூண்டு :
இந்த நீர் தேக்க பிரச்சினையை போக்க வெள்ளை பூண்டை வெறும் வயிற்றில் சாப்பிட வேண்டும்.
ஏனெனில் பூண்டு ஒரு டையூரிடிக் இது நமது உடலில் உள்ள அதிகப்படியான தண்ணீர் மற்றும் நச்சுக்களை சிறுநீரகம் வழியாக வெளியேற்றி விடும். மேலும் பூண்டில் உள்ள பொருட்கள் எடையை குறைக்கவும் பயன்படுகிறது. எனவே இந்த முறையின் மூலம் ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடிக்கலாம்.
பச்சையாக பூண்டை உங்கள் வாயில் மெல்லும் போது ஒரு துர்நாற்றம் வீசும். எனவே இதை செய்த பிறகு மெளத் வாஷ் அல்லது புதினாவை மென்றால் இந்த நாற்றம் இருக்காது.
பெருஞ்சீரகம் டீ:
பெருஞ்சீரகத்தில் அனிதோல் என்ற பொருள் உள்ளது. இதிலும் டையூரிடிக் பொருள் இருப்பதால் நமது உடலில் உள்ள அதிகப்படியான தண்ணீரை வெளியேற்றுவதோடு நமது இரத்த அழுத்தத்தையும் குறைக்கிறது.
பெருஞ்சீரக டீ தயாரிக்கும் முறை
தேவையான பொருட்கள்
1 டேபிள் ஸ்பூன் பெருஞ்சீரகம்
2 கப் தண்ணீர்
செய்முறை
ஒரு பாத்திரத்தில் தண்ணீரை கொதிக்க வைத்து அடுப்பை அணைத்து விடவும்
பிறகு கொதித்த தண்ணீரில் பெருஞ்சீரகம் போட்டு ஒரு மூடியால் மூடி விட வேண்டும்.
அப்படியே 15-20 நிமிடங்கள் வைத்திருக்க வேண்டும்
பிறகு வடிகட்டி வெதுவெதுப்பான நீரை பருகவும்
ஒரு நாளைக்கு இரண்டு முறை என்ற வீதத்தில் செய்து வந்தால் நல்ல மாற்றத்தை காணலாம்.
வெதுவெதுப்பான எலுமிச்சை ஜூஸ்
லெமன் ஜூஸ்(உப்பு மற்றும் சர்க்கரை சேர்க்காமல்) ஒரு சக்தி வாய்ந்த டையூரிடிக் ஆகும். இதிலுள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் நமது உடலில் உள்ள அதிகப்படியான நீர் மற்றும் நச்சுக்களை வெளியேற்றி விடும்.
அரை லெமனை ஒரு டம்ளர் வெதுவெதுப்பான நீரில் கலந்து தயாரிக்கவும். நன்றாக கலந்து கொள்ளவும். ஒரு நாளைக்கு இரண்டு முறை என்று வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும்.
ஐஸ் பேக் :
சில ஜஸ் கட்டிகளை ஒரு துணியில் கட்டிக் கொண்டு வீங்கிய இடத்தில் 10 நிமிடங்கள் வைத்து அப்புறம் 10 நிமிடங்கள் கழித்து மறுபடியும் ஒத்தடம் கொடுக்க வேண்டும். இதை 1மணி நேரம் செய்ய வேண்டும். கொஞ்சம் கனமான துணியாக இருக்க வேண்டும்.
கவனத்தில் :
டயாபெட்டீஸ் நோயாளிகள் மற்றும் குறைந்த இரத்த அழுத்தம் உடையவர்கள் இதை செய்யக் கூடாது
வெங்காயம்;
பூண்டு, வெங்காயம் ஒரு சிறந்த டையூரிடிக். இவைகள் நமது இரத்த அழுத்தத்தக குறைத்தல் மற்றும் சோடியம் – நீர்ச்சத்து இவற்றை சமநிலையாக்கி நமது உடலில் உள்ள அதிகப்படியான நீரை வெளியேற்றுகிறது. எனவே வெங்காயத்தை நசுக்கி ஒரு நாளைக்கு இரண்டு முறை என்று வெறும் வயிற்றில் சாப்பிட்டால் ஒடிமா சரியாகி விடும்.
கொத்தமல்லி தேநீர் :
பெருஞ்சீரகம், கொத்தமல்லி விதைகள் ஒரு சிறந்த டையூரிடிக் ஏஜென்ட்டாகும்.
தேவையான பொருட்கள்
1 டேபிள் ஸ்பூன் கொத்தமல்லி விதைகள்
ஒரு கப் தண்ணீர்
தயாரிக்கும் முறை
மிதமான தீயில் ஓரு பாத்திரத்தில் தண்ணீரை சூடுபடுத்த வேண்டும்.
பிறகு கொத்தமல்லி விதைகளை சேர்த்து தண்ணீர் பாதியாகும் வரை கொதிக்க விட வேண்டும்.
பிறகு தண்ணீரை வடிகட்டி ஒரு நாளைக்கு மூன்று முறை என்று வெதுவெதுப்பாக குடிக்கவும்.
வாழைப்பழம் :
வாழைப்பழத்தில் அதிகமான பொட்டாசியம் உள்ளது. இது நமது உடலில் உள்ள சோடியத்தை சமநிலைபடுத்துகிறது. ஒரு நாளைக்கு மூன்று வாழைப்பழம் சாப்பிட்டால் உடலிலுள்ள அதிகப்படியான நீர் வெளியேறிவிடும்.
ஊறிய உலர்ந்த திராட்சை :
உலர்ந்த திராட்சை யிலும் அதிகப்படியான பொட்டாசியம் உள்ளது. ஒரு கைப்பிடியளவு உலர்ந்த திராட்சையை இரவில் ஊற வைத்து அடுத்த நாள் அதை சாப்பிடவும். தேங்கிய நீர் முற்றிலுமாக வற்றிவிடும்.
உப்பை குறைக்கவும்
உணவில் போடப்படும் உப்பை அறவே குறைக்கவும். பழங்கள் மற்றும் காய்கறிகள் சாப்பிடுங்கள்.ஏனெனில் அதிகமான உப்பு உடம்பில் நீர் தேக்கங்களை ஏற்படுத்தும். எனவே உப்பை குறைக்கும் போது தேங்கிய தண்ணீர் வெளியேறிவிடும்.
யோகார்ட் :
ஒரு பெளல் யோகார்ட்டை சாப்பிடுவதற்கு முன் வெறும் வயிற்றில் சாப்பிட்டால் செல்களின் சுவர்களுக்கிடையேயுள்ள நீர் தேக்கத்தை சரி யாக்கி விடும்.ஏனெனில் யோகார்ட் ஒரு பால் பொருட்கள் அடங்கியது. இவைகள் எளிதாக நீரை ஊறிஞ்சி விடும். எனவே செல்களின் சுவர்களுக்கிடையே நீர் தங்காது.
டான்டெலியன் டீ :
டான்டெலியன் இலைகளில் நிறைய மருத்துவ குணங்கள் உள்ளன. இவைகள் நமது உடலில் தங்கியுள்ள அதிகப்படியான நீரை எளிதாக வெளியேற்றுகிறது. மேலும் சிறுநீரகம், கல்லீரல், குடல் போன்ற உறுப்புகளின் செயல்பாடுகளை துரிதப்படுத்தி நாம் ஆரோக்கியமாக இருக்க உதவுகிறது.
டீ தயாரிக்கும் முறை
தேவையான பொருட்கள்
டான்டெலியன் இலைகள்
2 கப் தண்ணீர்
1 ஸ்பூன் தேன்
தயாரிக்கும் முறை
ஒரிஜினல் பாத்திரத்தில் தண்ணீரை கொதிக்க வைத்து அதில் ஒரு டீ ஸ்பூன் தேன் சேர்க்கவும்
பிறகு அடுப்பை அணைத்து விட்டு அதில் டான்டெலியன் இலைகளை சேர்க்கவும்.
மூடியை மூடி அப்படியே 5 நிமிடங்கள் வைத்திருக்க வேண்டும்.
கவனிப்பு :
டயாபெட்டீஸ் நோயாளிகள் இந்த முறையை பின்பற்ற வேண்டாம். ஏனெனில் பக்க விளைவுகள் ஏற்பட வாய்ப்புள்ளது
பார்ஸிலி டீ :
பார்ஸிலியில் நிறைய ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் உள்ளன. இவை அதிகப்படியான சோடியம் உருவாகுவதை தடுக்கிறது. எனவே உடலில் தங்கியுள்ள அதிகப்படியான நீர் மற்றும் நச்சுக்களை வெளியேற்றி விடும்.
டீ தயாரிக்க கொதிக்கின்ற தண்ணீரில் பார்ஸிலி இலைகளை போட்டு ஒரு கப் தண்ணீரில் 5 நிமிடங்கள் வைக்க வேண்டும். பிறகு வடிகட்டி அந்த நீரை குடிக்கவும். ஒரு நாளைக்கு மூன்று முறை என்றால் நல்ல பலன் கிடைக்கும்.
கிரான்பெர்ரி ஜூஸ் :
ஒரு நீளமான டம்ளரில் தினமும் ஒரு முறை கிரான்பெர்ரி ஜூஸ் குடித்தால் நீர் தேக்கத்தை சரி செய்கிறது. ஏனெனில் இது ஒரு டையூரிடிக் என்பதால் உடலில் தேங்கியுள்ள தேவையில்லாத நீர்ச்சத்தை வெளியேற்றுகிறது.
ஆப்பிள் சிடார் வினிகர் :
ஒரு டேபிள் ஸ்பூன் ஆப்பிள் சிடார் வினிகரை ஒரு கிளாஸ் வெதுவெதுப்பான நீரில் கலந்து காலையில் வெறும் வயிற்றில் குடித்தால் ஒடிமா சரியாகி விடும்.ஏனெனில் ஆப்பிள் சிடார் வினிகர் உங்கள் உடலிலுள்ள பொட்டாசியம் அளவை அதிகரித்து சோடியத்தை குறைக்கிறது. இதனால் நீர் தேக்கத்தையும் குறைக்கிறது.
எப்சம் உப்பு :
எப்சம் உப்பு என்பது ஒரு விதமான உப்பாகும். இது நமது உடலில் உள்ள அதிகப்படியான நீர் மற்றும் நச்சுக்களை வெளியேற்றி விடும்.
ஒரு பக்கெட் நிறைய வெதுவெதுப்பான தண்ணீரில் 1 டேபிள் ஸ்பூன் எப்சம் உப்பு கலந்து அதில் நீர் தேங்கியுள்ள பகுதியை மூழ்க வைக்க வேண்டும். கிட்டத்தட்ட 10-15 நிமிடங்கள் வைக்க வேண்டும். ஒரு நாளைக்கு ஒரு முறை செய்தால் போதும்.
இப்படி செய்யாவிட்டால் உங்கள் பாத் டப்பில் வெதுவெதுப்பான நீரை நிரப்பி அதில் எப்சம் உப்பு கலந்து குளித்தாலும் நீர் கட்டு இறங்கி விடும்