ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாளை மட்டக்களப்பு செல்லவிருக்கின்ற நிலையில் அவருக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் மட்டக்களப்பு மங்களாராம விகாராதிபதி அம்பிட்டிய சுமனதேரர் கறுப்புக்கொடி கட்டி போராட்டம் ஒன்றை நடத்தியுள்ளார்.
குறித்த போராட்டம் இன்று மாலை நடைபெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கிழக்கு மாகாணத்தின் மட்டக்களப்பு, அம்பாறை, திருகோணமலை ஆகிய மாவட்டங்களை சேர்ந்த 385 பட்டதாரிகளுக்கான ஆசிரிய நியமனங்கள் வழங்கும் நிகழ்வு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் மட்டக்களப்பு நாளை வெபர் மைதானத்தில் நடைபெறவுள்ளது.
இதன்போது, ஜனாதிபதி மட்டக்களப்பு அமிர்தகழி ஸ்ரீ மாமாங்கேஸ்வரர் ஆலயத்தில் நடைபெறவுள்ள பூஜை வழிபாடுகளில் கலந்து கொள்ளவுள்ளார்.
மட்டக்களப்பில் உள்ள பௌத்த விகாரை , கிறிஸ்தவ தேவாலயம் , பள்ளிவாசல் ஆகியவற்குக்கு செல்ல வேண்டும் அவ்வாறு செல்லாமல் அமிர்தகழி ஸ்ரீ மாமாங்கேஸ்வரர் ஆலயத்திற்கு மட்டும் செல்வாரானால் அதனை தான் வன்மையாக கண்டிப்பதாகவும், இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் நாளை எதிர்ப்பு நடவடிக்கையினை மேற்கொள்வதாகவும் மங்களராம விகாரை வாசல் கோபுரத்தில் ஏறி கருப்பு கொடியினை பறக்கவிட்டு விகாராதிபதி அம்பிட்டிய சுமனதேரர் எதிர்ப்பினை தெரிவித்துள்ளார்.