2 வாழைப்பழம் காலையில்: இவர்கள் மட்டும் சாப்பிடக் கூடாது|

காலை உணவாக வாழைப்பழத்தை சாப்பிடுவதால் வயிறு நிரம்புவதோடு, ஏராளமான ஆரோக்கிய நன்மைகளும் கிடைக்கும். அதனால் காலை உணவாக 1-2 வாழைப்பழத்தை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் என்னவென்று பார்க்கலாம்.

நன்மைகள்
  • வாழைப்பழத்தை சாப்பிட்டால், பல மணிநேரம் பசி எடுக்காமல் இருப்பதோடு, ஆரோக்கியமற்ற உணவுகளின் மீதுள்ள ஆர்வத்தைக் தடுக்கும்.
  • வாழைப்பழத்தில் நார்ச்சத்து அதிகளவில் உள்ளது. அதனால் அது செரிமான மண்டலத்தை சீராக்கி, செரிமான பிரச்சனையை குறைக்கும்.
  • குடலில் நல்ல பாக்டீரியாக்களின் வளர்ச்சியை மேம்படுத்தி, ஊட்டச்சத்துக்களை உறிஞ்சும் நொதிகளையும் உற்பத்தி செய்ய உதவுகிறது.
  • வாழைப்பழத்தில் உள்ள அதிகளவிலான டயட்டரி நார்ச்சத்துக்கள், குடலியக்கத்தை மேம்படுத்தி, மலச்சிக்கல் பிரச்சனை வராமல் தடுக்கிறது.
  • உடல் எடையைக் குறைக்க நினைப்பவர்கள் டயட்டில் வாழைப்பழத்தை சேர்த்துக் கொள்ளலாம். உடல் எடை கட்டுப்பாட்டில் இருக்கும்.
  • காலையில் வாழைப்பழத்தை சாப்பிட்ட பின்பு, சுடுநீரில் எலுமிச்சை சாறு பிழிந்து குடித்தால், உடல் எடையில் நல்ல மாற்றத்தைக் காணலாம்.
  • ரத்த சிவப்பணுக்களின் உற்பத்தியை அதிகரிக்க செய்து, ரத்த சோகை மற்றும் ரத்த அழுத்தம் பிரச்சனைகள் வராமல் தடுக்கிறது.
  • எலும்புகளை வலிமையாக்கி, வயிற்று அல்சர், தசை பிடிப்புகள், சிறுநீரக புற்றுநோய் போன்ற பிரச்சனைகளை தடுக்கிறது. 
யாரெல்லாம் சாப்பிடக் கூடாது?

வாழைப்பழம் இனிப்பானது. அதில் அதிகளவிலான ஃபுருக்டோஸ் உள்ளது. எவ்வித குறைபாடுகளும் இல்லாமல் ஆரோக்கியமாக உள்ளவர்கள் காலை உணவாக வாழைப்பழத்தை தினசரி எடுத்துக் கொள்ளலாம்.

ஆனால் ஏற்கனவே சர்க்கரை நோய் இருப்பவர்கள், வாழைப்பழத்தை வெறும் வயிற்றில் சாப்பிடக் கூடாது. ஏனெனில் அது ரத்த சர்க்கரை அளவை சட்டென்று அதிகரித்துவிடும்.