மகளின் விளையாட்டை ரசித்த விஜய்! வைரலாகும் புகைப்படம்

‘மெர்சல்’ படத்தை தொடர்ந்து ஏ.ஆர்.முருகதாஸ் படத்தில் பிஸியாக நடித்து வருகிறார் நடிகர் விஜய். சன்பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்தப் படம் தீபாவளிக்கு ரிலீஸாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் நடிகர் விஜய் தனது மகளின் பள்ளிக்கு விசிட் அடித்த புகைப்படமொன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

விஜய்

இவருக்கு சஞ்சய், சாஷா என்ற மகனும், மகளும் இருக்கின்றனர். இதில் சஞ்சய் 12ம் வகுப்பும், சாஷா 7ம் வகுப்பும் படித்து வருகின்றனர். சென்னையில் உள்ள அமெரிக்கன் இன்டர்நேஷனல் ஸ்கூலில் படித்து வரும் சாஷா சமீபத்தில் பள்ளியில் நடந்த பேட்மின்டன் விளையாட்டில் பங்கேற்றார். தனது மகள் விளையாடுவதை பார்க்க விஜய் பள்ளிக்குச் சென்றுள்ளார். அங்கே, தன் மகள் பேட்மின்டன் விளையாடுவதை ஒரு ஓரத்தில் நின்று அவர் கண்டுகளித்துள்ளார். அப்போது, அங்கே எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. மேலும், இத்தோடு சஞ்சய் பள்ளியில் நடந்த மரக்கன்று நடும் முகாமில் கலந்துகொண்டு மரக்கன்றுகளையும் நட்டுள்ளார். அப்போது எடுக்கப்பட்ட சஞ்சயின் புகைப்படமும் வைரலாகி வருகிறது.

விஜய் புகைப்படம்