திருடனுக்கு திருட வந்த இடத்தில் கிடைத்த அற்புத வாழ்வு!

நிறுவனத்தில் திருட வந்த கொள்ளையர்களுக்கு அந்நிறுவனம் வேலை வழங்கியுள்ள சம்பவம் சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

நியூசிலாந்தில் உள்ள கிரேன் அண்ட் கன்ஸ்ட்ரக்‌ஷன்ஸ் நிறுவனத்திற்கு கொள்ளையர்கள் சிலர் கொள்ளையடிக்க சென்றுள்ளனர்.

ஆனால் மாட்டிக் கொண்ட அவர்களை அந்நிறுவனம் பொலிசாரிடம் பிடித்து கொடுக்காமல் அவர்களுக்கு வேலை வழங்கியுள்ளது.

தன்னுடைய பேஸ்புக் பக்கத்தில் இது குறித்து அந்நிறுவனம் தெரிவிக்கையில், அவர்களிடம் சில நல்ல பண்புகள் இருக்கும் எனவும், அதனால், திருடுவதை கைவிட்டு உழைக்க வேண்டும் எனக்கூறி வேலை வழங்கியதாகவும் குறிப்பிட்டிருந்தது.

மேலும் காலையில் சீக்கிரம் எழுந்திருப்பது, இரவில் பணி செய்தல், சாதனங்களை கையாளுதல் ஆகியவற்றில் திருடர்கள் திறன் பெற்றவர்கள் என்பதாலே பணி வழங்கியதாகவும், அவர்கள் வேலை பார்ப்பது தொடர்பான புகைப்படத்தையும் பதிவேற்றம் செய்துள்ளது.

இதைக் கண்ட இணையவாசிகள் திருட வந்த இடத்தில் திருடனுக்கு கிடைத்த அற்புத வாழ்வு என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.

சமீபத்தில் கனடாவில் பெண் ஒருவரின் பர்சை திருடன் திருடிச் சென்ற போது, பெண் ஒருவர் அவரை பிடித்து டீ வாங்கிக் கொடுத்த சம்பவம் வைரலாக பரவியது குறிப்பிடத்தக்கது.