ஆஸ்திரேலிய நீச்சல் வீரர் 99 வயதில் சாதனை!!

ஆஸ்திரேலிய நீச்சல் வீரர் ஜார்ஜ் (99 வயது) 50 மீற்றர் ஃப்ரீ ஸ்டைல் நீச்சல் போட்டியில் புதிதாக உலக சாதனை படைத்துள்ளார்.ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்தில் கடந்த 28 ஆம் திகதி காமன்வெல்த் நீச்சல் போட்டிக்கான சோதனை நிகழ்வு நடைபெற்றது. அதில் 100 – 104 வயதோருக்கான நீச்சல் போட்டியில் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஜார்ஜ் கோரோன்ஸ் பங்குபெற்றார்.99 வயதான ஜார்ஜ் வரும் ஏப்ரலில் 100 வயதை எட்டுகிறார். 50 மீற்றர் ஃப்ரீ ஸ்டைல் நீச்சல் போட்டியில் யாரும் எதிர்பார்த்திராத உலக சாதனை படைத்துள்ளார் ஜார்ஜ்.2014- ஆம் ஆண்டு, 100 -104 வயதினோருக்கான பிரிவில் கனடா நீச்சல் வீரர், 50 மீற்றர் தூரத்தை 1 நிமிடம் 31 விநாடிகளில் கடந்தது உலக சாதனையாகக் கருதப்பட்டது.நேற்று முன்தினம் நடந்த நீச்சல் போட்டியில் ஆஸ்திரேலிய வீரர் ஜார்ஜ், 50 மீற்றர் தூரத்தை 56.12 விநாடிகளில் கடந்து உலக சாதனையை முறியடித்து, புதிய மைல்கல்லை உருவாக்கியுள்ளார்.