கர்ப்பிணி மனைவியை கொன்ற கணவன்: திடுக்கிடும் காரணம்!

தமிழ்நாட்டில் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தி கர்ப்பிணி மனைவியை கொலை செய்த கணவரின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டையை சேர்ந்த நாராயணன் – சுதா தம்பதிக்கு 3 ஆண்டுகளுக்கு முன் திருமணமாகி 2 வயது ஆண் குழந்தை உள்ளது.

ஏற்கனவே பெண்வீட்டார் கொடுத்த நகைகள் மற்றும் பைக்கை விற்ற நாராயணன், வேலைக்கு செல்லாமல் இருந்துள்ளார்.

இதோடு 10 சவரன் நகையும், 2 லட்சம் பணமும் கேட்டு சுதாவை துன்புறுத்தியதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், 6 மாதம் கர்ப்பமாக இருந்த சுதா இறந்துவிட்டதாக அவரது பெற்றோருக்கு தகவல் தெரிவித்த நாராயணன் தமது தாய், தந்தையுடன் தலைமறைவானார்.

இது குறித்து பொலிசாருக்கு தகவல் தரப்பட்ட நிலையில் சம்பவ இடத்துக்கு வந்த அவர்கள் சுதாவின் சடலத்தை கைப்பற்றினார்கள்.

சுதா அரிவாள்மணையால் கழுத்தறுத்து கொலை செய்யப்பட்டதை உறுதி செய்த பொலிசார் நாராயணனை தேடி வருகின்றனர்.