அமாவாசை தவிர மற்ற நாட்களிலும் காகத்திற்குச் சாதம் வைக்கலாமா?

தினந்தோறும் நாம் உணவருந்துவதற்கு முன்னால் காகத்திற்குச் சாதம் வைப்பது நல்லது.

ஸ்நானம் செய்யாமல் சமைத்த சாதத்தை காகத்திற்கு வைக்கக்கூடாது.

தினசரி காகத்திற்குச் சாதம் வைக்க இயலாதவர்கள் அமாவாசை மற்றும் விரத நாட்களிலாவது அவசியம் காகத்திற்குச் சாதம் வைக்க வேண்டும் என்பதை பெரியோர்கள் வலியுறுத்திச் சொல்லியிருக்கிறார்கள்.

அதற்காக அமாவாசை நாளில் மட்டும்தான் காகத்திற்குச் சாதம் வைக்க வேண்டும் என்பதில்லை.

தினசரி காகத்திற்குச் சாதம் வைத்தபின் நாம் சாப்பிடுவது நமது பரம்பரைக்கே நன்மை தரக்கூடியது.