இதை செய்தால் முடி உதிர்வு முற்றிலும் நின்று விடும்!

இன்றைய காலகட்டத்தில் உள்ள ஆண், பெண் அதிக அளவில் தலைமுடி உதிர்வு பிரச்சனைகளை சந்திக்கின்றனர்.

இதற்கு காரணம் சரியான பராமரிப்பு இல்லாததே ஆகும். முறையான பராமரிப்பு இல்லாமல் இருந்தால் முடி உதிர்தல், அடர்த்தி குறைதல் போன்ற பிரச்சனை ஏற்படும்.

அவற்றை எளிய முறையில் கட்டுப்படுத்த சில எளிய டிப்ஸ்கள் இதோ..

தலைமுடி உதிர்வை தடுக்கும் டிப்ஸ்கள்?
  • குளிக்கும் போது அல்லது தலைமுடியை காய வைக்கும் போது தலைமுடியை அதிகமாக அழுத்தாமல் லேசான காட்டன் துணியை பயன்படுத்த வேண்டும்.
  • தலைக்கு குளித்த பின் ஹேர் ஜெல்லை தலைமுடி காய்வதற்கு முன் தடவக் கூடாது. பொதுவாக கேர் ஜெல்லை பயன்படுத்தவேக் கூடாது.
  • ஆப்பிள் சீடர் வினிகரை நீரில் கலந்து குளித்து வந்தால் தலைமுடி உதிர்வு மற்றும் முடி வறட்சி குறையும்.
  • கொய்யா இலையை அரைத்து இரவு தூங்குவதற்கு முன் தலையில் தடவி மறுநாள் காலையில் அலசினால் முடி உதிர்தல் குறையும்.
  • முள்ளங்கி சாறை தலையின் அடியில் படுமாறு தடவி வந்தால் தலைமுடி உதிர்வு குறைந்து, தலைமுடியின் வளர்ச்சியும் அதிகரிக்கும்.
  • உருளைக்கிழங்கை வேகவைத்த நீரை கொண்டு வாரம் ஒருமுறை தலைமுடியை அலச வேண்டும். அதனால் முடி உதிர்வு நின்றுவிடும்.
  • வெங்காயத்தை நீரில் போட்டு வேக வைத்து, பின் அந்த நீரினால் தலைமுடியை அலசலாம் அல்லது வெங்காயத்தை சாறு எடுத்து முடியை மசாஜ் செய்து குளிக்கலாம்.