கல்யாணம் பண்ண போறீங்களா? இதை எல்லாம் அதற்கு முன்னாடி பண்ணிக்கோங்க

திருமணம் என்பது ஒருவரின் வாழ்வை அடுத்தக் கட்டத்திற்கு எடுத்துச் செல்வதாகும். அந்த நிலைக்கு செல்லும்போது சிலர் தங்கள் வாழ்க்கையின் சில பகுதிகளை தியாகம் செய்ய வேண்டியிருக்கும். அது ஆண், பெண் இருவருக்குமே பொருந்தும்.

இதில், குறிப்பாக ஆண்கள் நிறைய சில விஷயங்களை கற்றுக்கொள்ளாமல் போவதால் மிகுந்த சிக்கலில் மாட்டிக்கொள்கிறார்கள். சில விஷயங்களை அனுபவிக்காமலும் போகிறார்கள். அந்த ஒரு சில விஷயங்கள் இதோ…

  • ஆண்கள் பொதுவாகவே மொபைல் போன், பிளே ஸ்டேசன் கேம் என்று தொழில்நுட்பங்களில் ஆர்வமாக இருப்பார்கள். இதெல்லாம் கல்யாணத்துக்கு முன்னாடியே வாங்கிட்டீங்கனா நல்லது. கல்யாணத்துக்கு அப்புறம் உங்க மனைவியோட பட்ஜெட்ல இதுக்கெல்லாம் இடம் இருக்காது.
  • இப்பவேனா நீங்கள் மெர்சல், விவேகம்னு முட்டி மோதி பார்க்கலாம். கல்யாணத்துக்கு அப்புறம் டிவி சீரியல், காதல் படம், குடும்ப படம் அப்படினுதான் பார்க்கணும்.
  • கல்யாணத்துக்கு அப்புறம், திட்டும் பழக்கம் இருந்தால் குடும்பத்துக்கு சங்கு ஊத வேண்டியதான்.
  • கல்யாணம் எப்புடி பலருக்கு ஒருமுறை அனுபவமோ அதே மாதிரிதான் பேச்சிலர் பார்ட்டியும், உங்கள் நண்பர்கள் எல்லாரையும் கூப்பிட்டு, ஜமாய் பண்ணுங்க.
  • வாழ்க்கையில ஒருமுறையாவது காதல் தோல்வியை அனுபவிச்சிருங்க. அது இல்லனா வாழ்க்கையே முழுமையாகாது.