இரும்பு ராடை பிறப்புறுப்புக்குள் செலுத்தி ராகிங் செய்த சீனியர்கள்..

சட்டீஸ்கர் மாநிலம் ரெய்ப்பூரில் உள்ள பள்ளி விடுதி ஒன்றில் 3 ஆம் வகுப்பு படிக்கும் சிறுமி ஒருவரின் பிறப்பிறுப்பில் இரும்பு ராடை செலுத்தி அவரது சீனியர் மாணவிகள் ராகிங் செய்த கொடுமை அம்பலத்துக்கு வந்துள்ளது.

சட்டீஸ்கர் மாநிலம் ரெய்பூரை அடுத்த பிலாஸ்பூர் பகுதியில் உள்ள அரசுப் பள்ளியில் ராஜி என்ற 7 வயது சிறுமி 3ஆம் வகுப்பு படித்து வருகிறார். தந்தை இறந்துவிட்ட நிலையில் ஏழ்மை நிலையில் இருந்த ராஜியின் தாய் அவரை படிக்க வைத்து வருகிறார்.

அந்த பள்ளியைச் சேர்ந்த விடுதி ஒன்றில் ராஜி தங்கி படித்து வருகிறார். இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக் கிழமை தனது மகளைப் பார்க்க வந்த தாய், ராஜி அழுது வீங்கி கண்களுடன் இருந்ததைப் பார்த்து பதறிப் போய் என்ன பிரச்சனை என கேட்டுள்ளார்.

அப்போது ராஜி தனக்கு நேர்ந்த கொடுமையை விவரித்துள்ளார். அதே விடுதியில் 7 மற்றும் 8 ஆம் வகுப்பு பயிலும் சில மாணவிகள், ராஜியை சிறுமி என்றும் பாராமல் வேலை வாங்கியுள்ளனர்.

மேலும் தொடர்ந்து ராஜியை அடித்து துன்புறுத்தி வந்த சீனியர் மாணவிகள், ஒரு கட்டத்தில் அவரின் பிறப்புறுப்புக்குள் இரும்பு ராடரை செலுத்தி தாக்கியுள்ளனர்.

இது குறித்து ராஜியின் தாய் பொலிஸில் புகார் அளித்துள்ளார். பொலிஸாரும் அந்த விடுதிக்குச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த தகவல் சட்ஸ்கரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஒரு சிறுமி என்றும் பாராமல், சக மாணவிகளே ராகிங் என்ற பெயரில் ராஜியைத் தாக்கி இருப்பது மனிதாபிமானம் செத்துவிட்டதா? என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.