ஜெயலலிதா சமாதியில் காவலர் ஒருவர் தன்னைத்தானே சுட்டுக்கொண்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை கடற்கரையில் உள்ள எம்.ஜி.ஆர் சமாதி வளாகத்தில் அமைந்துள்ளது, மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் சமாதி.
பொதுமக்கள் மற்றும் அரசியல் பிரமுகர்கள் தொடர்ந்து அங்கு வந்து செல்வதால் தமிழக அரசு சார்பில் 24 மணி நேர பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.
பொலிஸார் வழங்கி வந்த பாதுகாப்பு பணியில் மதுரையைச் சேர்ந்த ஆயுதப் படை காவலர் அருண் ராஜ் என்பவரும் ஈடுபட்டு வந்துள்ளார்.
இந்நிலையில், இன்று(4/3/2108) அதிகாலை 4.55 மணியளவில் தன்னிடமிருந்த துப்பாக்கியால் தன்னைத் தானே சுட்டு அருண் தற்கொலை செய்து கொண்டார்.
கடற்கரைக்கு காலையில் நடைபயிற்சிக்காக வந்திருந்த பொதுமக்கள் இந்த சம்பவத்தினால் அதிர்ச்சியடைந்தனர்.
மேலும், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பொலிஸ் உயர் அதிகாரிகள் தற்கொலைக்கான காரணம் குறித்து தீவிர விசாரணை நடைபெற்று வருவதாக தெரிவித்துள்ளனர்.