துபாயில் மரணமடைந்த நடிகை ஸ்ரீதேவி மரணம் குறித்து, போனி கபூரின் நண்பர் கோமல் நாதா தன்னுடைய பிளாக் பக்கத்தில் பதிவேற்றம் செய்துள்ளார்.
உறவினரின் திருமணத்திற்காக துபாய் சென்ற ஸ்ரீதேவி அங்கு இருந்த குளியலறையில் தவறி விழுந்து மரணமடைந்தார். அதன் பின் மும்பை கொண்டு வரப்பட்டு இறுதி சடங்குகள் என அனைத்தும் முடிந்தாலும், அவரது மரணம் குறித்து பல்வேறு கேள்விகள் எழுந்த வண்ணம் உள்ளது.
இந்நிலையில் திரைப்பட வர்த்தக ஆய்வாளரும், நடிகை ஸ்ரீதேவியின் கணவரான போனி கபூரின் நண்பருமான Komal Nahta அவருடைய Blog பக்கத்தில் ஸ்ரீதேவி மரணம் குறித்து பதிவேற்றம் செய்துள்ளார்.
E-X-C-L-U-S-I-V-E! Boney Kapoor’s Emotional Recounting Of What Happened On The Fateful Evening Of 24th February! https://t.co/a5QRAEXLzD
— Komal Nahta (@KomalNahta) March 3, 2018
அதில் துபாயில் உறவினரின் திருமணத்திற்காக நடிகை ஸ்ரீதேவி கணவர் போனிகபூர் மற்றும் இளையமகள் குஷிகபூர் ஆகியோர் கடந்த 20-ஆம் திகதி சென்றனர்.
அதன் பின் முக்கியமான மீட்டிங் இருந்ததால் போனி கபூர் 22-ஆம் திகதி லக்னோ திரும்பியுள்ளார். போனி கபூர் திரும்பினாலும், தன்னுடைய மகளிற்கு ஷாப்பிங் செய்ய வேண்டும் என்பதால் ஸ்ரீதேவி ஹோட்டலில் தங்கியுள்ளார். அவர் தங்கியிருந்த Room No. 2201 ஆகும்.
இந்நிலையில் லக்னோ திரும்பிய அவரிடம் ஸ்ரீதேவியி பேசியுள்ளா. அப்போது போனி கபூரிடம் நான் உங்களை மிகவும் மிஸ் செய்கிறேன் என்று கூறியுள்ளார்.
இதையடுத்து மனைவிக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்க வேண்டும் எண்ணிய போனி கபூர் ஒரு ரோமேண்டிக் டிண்ணர் ஏற்பாட்டுடன் கடந்த 24-ஆம் திகதி மாலை 3.30 மணிக்கு துபாய் செல்லும் விமானத்தில் புறப்பட்டு துபாய்க்கு சென்றுள்ளார்.
சரியாக 06.20 மணிக்கு துபாய் சென்ற அவர் மனைவிக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார். போனி கபூரை கண்ட அவர் முத்தம் கொடுத்து பேசியுள்ளார். சுமார் 15 நிமிடங்கள் பேசிய இவர்கள், அதன் பின் டின்னருக்கு வெளியே செல்ல வேண்டும் என்பதால் குளியலறைக்கு சென்றுவிட்டு வருவதாக கூறிவிட்டு ஸ்ரீதேவி சென்றுள்ளார்.
அந்த நேரத்தில் போனி கபூர் அறையில் இருந்த டிவியில் இந்தியா-தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதிய போட்டிகளின் தொகுப்பு மற்றும் பாகிஸ்தான் சூப்பர் லீக் ஹைலட்சை பார்த்துள்ளார்.
குளியலறைக்குள் சென்ற அவர் வெகு நேரமாகியும் வராத காரணத்தால், போனி கபூர் ’Jaan Jaan’ என்று ஸ்ரீதேவியை அழைத்துள்ளார்.
ஆனால் உள்ளே இருந்த எந்த பதிலும் வராத காரணத்தினால், அவர் பதற்றமடைந்த, அவர் கதவை திறந்து பார்த்து போது, தண்ணீர் முழுவதும் நிரப்பட்ட தொட்டியில் ஸ்ரீதேவியின் தலை முழுவதும மூழ்கி இருந்துள்ளது.
தண்ணீரில் முழுமையாக மூழ்கிக் கிடந்த அவரை காப்பாற்ற போனி கபூர் போராடியுள்ளார்.ஆனால் முடியவில்லை என்று Komal Nahta குறிப்பிட்டுள்ளார்.