அமெரிக்காவில் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற துப்பாக்கி சூட்டில் பெற்றோரை மாணவனே சுட்டுக்கொன்றது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவில் உள்ள சென்டிரல் மிச்சிகன் பல்கலைக்கழகத்தில் 19 வயது மாணவன் நேற்று முன்தினம் துப்பாக்கியால் சுட்டதில் 2 பேர் கொல்லப்பட்டனர். ஆனால் பலியானவர்கள் இரண்டு பேருமே அங்கு படிக்கும் மாணவர்கள் அல்ல என்று பல்கலைக்கழகம் நிர்வாகம் அறிவித்துள்ளது.
ஜேம்ஸ் எரிக் டேவிட் என்று அடையாளம் காணப்பட்ட அந்த மாணவருக்கும் அவர் பெற்றோருக்கும் குடும்பத்தகராறு இருந்த நிலையில் ஜேம்ஸ் எரிக் டேவிட் பெற்றோரை சுட்டுக்கொன்றதும் தெரியவந்துள்ளது.
இதைத்தொடர்ந்து ஜேம்ஸ் எரிக் டேவிடை பொலிஸார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
துப்பாக்கி சூடு சம்பவத்துக்கு பின்னர் அங்கு பயின்று வரும் மாணவர்கள் அனைவரும் பத்திரமாக பல்கலைக்கழகத்தை விட்டுவெளியேற்றப்பட்டனர் .
சுமார் 23 ஆயிரம் மாணவர்கள் படித்து வரும் இந்த பல்கலைக்கழகம் பருவகால விடுமுறைக்கு பின்பு திறக்கப்பட்ட அன்றைய தினமே இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.