அம்மனின் அம்சமாக பெண்களை கூறுவது ஏன்?

பெண்களை அம்மனின் அம்சமாக நம் முன்னோர்கள் கூறுகின்றனர். கோயிலில் உள்ள அம்மனுக்கு என்னதான் பட்டுப்புடவை கட்டி மலர் மாலையெல்லாம் சூட்டினாலும், தாலி, தோடு, மூக்குத்தி, வளையல், ஒட்டியானம், மோதிரம் ஆகிய அணிகலன்கள் அணிவித்தால் தான் அலங்காரம் முழுமையடையும்.

இதுபோன்று தான் பெண்கள் அணியும் அணிகலங்களுக்கு சில விளக்கங்கள் கூறப்படுகின்றது. அவை என்னவொன்று பார்ப்போம்

  • தாலி – தாயாகி, தாலாட்டுப்பாட கணவன் தரும் பரிசு சின்னம்.
  • தோடு – எதையும் காதோடு போட்டுக் கொள். வெளியில் சொல்லாதே.
  • மூக்குத்தி – மூக்கு தான் முதலில் சமையலை அறியும் உத்தி என்பதை உணர்த்துகிறது.
  • வளையல் – கணவன் உன்னை வளைய, வளைய வர வேண்டும், என்பதற்காக,
  • ஒட்டியாணம் – கணவன், மனைவி இருவரும் ஈருடல் ஓருயிராய் ஒட்டியானோம் என்பதற்காக.
  • மோதிரம் – எதிலும் உன் கைத்திறன் காண்பிக்க.