நாம் என்றும் கண்கூடாக நேரில் பார்க்கக் கூடிய கடவுள் தான் சூரிய பகவான். அந்த சூரியக் கடவுள் உதயமாகும் அதிகாலை நேரத்தில் தூங்கக் கூடாது என்று சாஸ்திரங்கள் கூறுகிறது.
சூரியன் உதிக்கும் நேரத்தில் தூங்கக் கூடாது ஏன்?
சூரியன் உதிக்கும் அதிகாலை வேளையில் வானத்தில் தேவர்கள், சிவபார்வதி, மகாலட்சுமி போன்ற தெய்வங்கள் சஞ்சரிப்பதாக ஒரு ஐதீகம் உள்ளது.
எனவே அந்த நேரத்தில் கண்டிப்பாக தூங்கக் கூடாது. தியானம், வழிபாடு போன்ற பயனுள்ள பணிகளைச் செய்ய வேண்டும் என்றும் சாஸ்திரங்களில் கூறப்பட்டுள்ளது.
ஏனெனில் அந்த நேரத்தில் செய்யும் வழிபாடு பலமடங்கு புண்ணியத்தை தரும். அதற்கு தினமும் காலை நேரங்களில் ஒரு தீபம் ஏற்றி வைத்து தங்களின் இஷ்ட தெய்வத்திடம் தனது ஆசைகளை கூறி வேண்டினால் கண்டிப்பாக நிறைவேறுமாம்.