இந்த செடிகள் தான் வீட்டின் அமங்கலம்!

வாஸ்து சாஸ்திரப்படிசில செடிகள் மற்றும் தாவரங்களை வீட்டில் வைத்திருந்தால் அது வீட்டுக்கு அமங்கலத்தையும், துரதிஷ்டத்தையும் கொடுக்கும்.

அந்த வகையில் எந்த செடிகளையெல்லாம் வீட்டில் வளர்க்க கூடாது என்பதை பார்க்கலாம்.

கள்ளிச்செடி

கள்ளிச்செடிஅல்லது அது தொடர்புடைய முள் செடிகளைவீட்டில் வளர்க்கக்கூடாது, இதில் ரோஜா செடிகள்மட்டும் விதிவிலக்காகும்.

போன்சாய் செடிகள்

வாஸ்துபடி போன்சாய் தாவரங்கள் மற்றும் சிவப்பு மலர் பூக்கும் தாவரங்களை வீட்டுக்கு உள்ளே வைக்கக் கூடாது. ஆனால் வீட்டு வாசலில்அல்லது தோட்டத்தில்இவைகளை வைக்கலாம்.

புளி செடிகள்

புளி செடிகள்மற்றும் மரங்களில் கெட்ட சக்திகள் தங்கும் என்றநம்பிக்கை வெகுகாலமாக உள்ளது. அதனால் அந்த மரங்கள் இருக்கும் இடங்களில் வீடு கட்டுவதற்கு முன்னர் ஆலோசனை பெற வேண்டும்.

காய்ந்த செடிகள்

காய்ந்து போன இலைகள் கொண்ட எந்த செடிகளையும் வீட்டில் வைக்கக்கூடாது. அது துரதிஷ்டத்தை கொண்டு வரும் என நம்பப்படுகிறது.

கருவேல செடிகள்

கருவேல செடிகள்அல்லது மரங்களை எக்காரணம் கொண்டும் வீட்டில் வைக்கக்கூடாது. அப்படி வைத்தால்வீட்டில் பிரச்சனைகள் உருவாகும்.

பஞ்சு செடிகள்

பஞ்சு செடிகள், பனை மரம் போன்றவற்றை வீட்டிலோஅல்லது வீட்டை சுற்றியோ வளர்க்கக்கூடாது. அது அமங்கலத்தை குறிக்கும்.

தொட்டி செடிகள்

தொட்டியில் வளர்க்கப்படும் செடிகளை வீட்டின் வடக்கு மற்றும்கிழக்கு சுவர்கள் அருகில் வைக்கக்கூடாது.