அமெரிக்க அதிபர் டொனால் ரம் மற்றும் அவரது மனைவிக்கு இடையே பெரும் முரன்பாடு ஏற்பட்டுள்ளது என்றும். அவர்கள் இருவரும் பிரியும் நிலையில் உள்ளார்கள் என்றும் பல செய்திகள் வெளியாகிக் கொண்டு இருந்தது. அதனை நிரூபிக்கும் வகையில் நேற்றைய தினம் நடந்த ஒரு நிகழ்வு உள்ளது. வாஷிங்டனில் கடும் குளிர் காற்று வீசி வருகிறது. இதேவேளை அதிபர் ரம் மற்றும் அவரது மனைவி மெலீனா ஆகியோர் ஏர்-போஸ் 1 விமானத்தில் ஏறி மரணச் சடங்கு ஒன்றுக்கு செல்ல முற்பட்டார்கள். இதில் அவர்கள் தரையிறங்கிய வேளை எடுக்கப்பட்ட வீடியோவில் ரம் மெலினாவின் கைகளை பிடிக்கப் பார்க்க, அதனை உடனே தட்டி விடுகிறார் மெலீனா.
இதேவேளை பின்னர் விமானத்தில் ஏறும் வேளை, குளிர் காற்றை சமாளிக்க தனது மனைவியை சற்றும் கண்டு கொள்ளாது ரம் ஓடிச் சென்று விமானத்தில் முதலாவதாக ஏறிவிடுகிறார். பின்னரே மெலீனா செல்கிறார். வழமையான அமெரிக்க அதிபர் தனது மனைவியுடன் ஒன்றாக செல்வதே வழக்கம். குளிர் கற்றுக்காக மனைவியை விட்டு விலகி ஓடும் ரம், நாளை மக்களை எப்படி சரியாக கவனிப்பார் என்ற கேள்வி எழுகிறது அல்லவா ? சொந்த மனைவியையே கவனிக்காமல் சுய நலமாக செயல்படும் இவர் எவ்வாறு நாட்டு மக்களின் துயரங்களை அறிந்து செயல்படுவார் ?
வீடியோவைப் பாருங்கள் புரியும்… அதிர்வின் வாசகர்களுக்காக இந்தக் காணொளி…