உலகின் மிகப்பெரிய வல்லரசு நாடாக விளங்கும் அமெரிக்காவின் அதிபராக டொனால்டு டிரம்ப் பதவியேற்ற நாள் முதல் தொடர்ந்து சீனாவை விமர்சித்து வருகிறார். இதனால் இரு நாடுகள் மத்தியிலான நட்புறவும் மோசமான நிலையை அடைந்துள்ளது.
இந்நிலையில் தற்போது இரு நாடுகளுக்கு மத்தியிலான வர்த்தகப் போர் வெடிக்கும் நிலை உருவாகியுள்ளது. அப்படி என்ன தான் பிரச்சனை..?
அமெரிக்க அதிபர் தனது தேர்தல் பிரச்சார நாள் முதல் சீனாவிற்குச் சீன மக்களுக்கும் சென்ற வர்த்தக வாய்ப்புகள் மற்றும் வேலைவாய்ப்புகளைப் பிடுங்கி மீண்டும் அமெரிக்க மக்களுக்குக் கொடுப்பேன் எனக் கூறி வந்தார்.
டிரம்ப் வெற்றிக்கும் பின்பும் சீன குறித்துச் சில எதிர் கருத்துகளை முன்வைத்தாலும், அதிடரடியான நடவடிக்கைகள் எதுவும் பெரியதாக எடுக்கப்படவில்லை. ஆனால் கடந்த சில மாதங்களாக இந்தப் பிரச்சனை பெரிதாக வெடிக்கத் துவங்கியுள்ளது.
இந்திய இரு சக்கர வாகன உற்பத்தியாளர்களை ஊக்குவிக்கும் வகையில் வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படும் இரு சக்கர வாகனங்கள் மீது அதீத அளவிலான வரியை விதித்தது.
இதனைக் குறைக்க வேண்டும் என்றும், இந்த வரி உயர்வினால் அமெரிக்க நிறுவனமான ஹார்லி டேவிட்சன் போன்ற நிறுவனங்களின் வர்த்தகம் அதிகளவில் பாதிக்கும் என்று டொனால்டு டிரம்ப் குற்றம் கூறினார்.
ஆனால் டிரம்ப் சீனாவிற்கு எதிராகச் செய்த வேலையைப் பாருங்கள்.
சீனாவில் இருந்து அமெரிக்காவிற்கு அதிகமாக இறக்குமதி செய்யப்படும் ஸ்டீல், அலுமினியம் போன்ற பொருட்கள் மீது அதிகளவிலான வரியை விதித்தது மட்டும் அல்லாமல் இது உள்நாட்டு உற்பத்தியாளர்கள் ஊக்குவிக்கும் ஒரு நடவடிக்கை எனவும் அறிவித்துள்ளது.
ஸ்டீல் மீதான இறக்குமதி வரி 25 சதவீதம், அலுமினியம் மீது 10 சதவீதம் வரி விதிக்கப்பட்டுள்ளது. இதேபோல் ஜனவரி மாதம் சோலார் பேனல் மீது 30 சதவீதமும், வாஷிங் மிஷின் மீது 20-50 சதவீதம் அளவிலான வரியை விதித்தது அமெரிக்க அரசு.
டொனால்ட் டிரம்ப் தற்போது டிரான்ஸ் பசிபிக் கூட்டணியை ஒரம் கட்டிவிட்டு கனடா மற்றும் மெக்சிக்கோ உடனான வட அமெரிக்கா வர்த்தக வாய்ப்புகளில் அதிகளவிலான கவனத்தைச் செலுத்தி வருகிறது.
அமெரிக்கா மற்றும் சீனாவிற்கு இடையிலான வர்த்தகப் பற்றாக்குறையின் அளவு மட்டும் 375 பில்லியன் டாலர். அமெரிக்காவில் இருந்து சீனாவிற்கு ஏற்றுமதி செய்வதை விடவும் இறக்குமதி செய்யும் அளவு மிகவும் அதிகமாக உள்ளது. இதன் வித்தியாசத்தின் மதிப்பு தான் 375 பில்லியன் டாலர்.
சீன அதிபரும், சீன அரசும் பலமுறை அமெரிக்காவுடன் சுமுகமான பேச்சுவார்த்தை நடந்த அழைப்பு விடுத்தும் எவ்விதமான பலனும் இன்றித் தற்போது அமெரிக்கா சீனாவிற்கு ஏதிராகப் பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
இந்நிலையில் இரு நாடுகளும் பொருளாதாரத்திலும், வர்த்தகத்திலும் சிறந்து விளங்கும் இன்றைய சூழ்நிலையில் டொனால்டு டிரம்ப்-பின் இந்தச் செயல் அமெரிக்கா சீனாவிற்கு இடையில் மிகப்பெரிய வர்த்தகப் போர் உருவாக்கும் நிலையை ஏற்படுத்தியுள்ளது.
இத்தகைய சூழ்நிலையில் சீனா என்ன செய்யும்.. சீனா அமெரிக்காவிடம் இருந்து சோயாபின்ஸ், சோளம் மற்றும் இறைச்சியை அதிகளவில் இறக்குமதி செய்கிறது. தற்போது இந்தப் பிரச்சனையால் அமெரிக்கா விடுத்து வேறு நாடுகளுடன் கூட்டணி வைக்கலாம்.
சீனா அமெரிக்காவின் போயிங் நிறுவனத்தில் ஆயிரத்திற்கும் அதிகமான விமானங்களை வாங்குகிறது. இதனை ஐரோப்பா நிறுவனமான ஏர்பஸ் உடன் வாங்கலாம்.
சீனாவில், அமெரிக்காவில் பல பார்மா, திரைப்பட, இசை நிறுவனங்கள் உள்ளது இதனை மத்தியில் அதிகளவிலான விதிகளை விதிக்கலாம். இதனால் அமெரிக்க நிறுவனங்கள் சீனாவை விட்டு வெளியேறவும் வாய்ப்புகள் உள்ளது.
சீனாவில் பல அமெரிக்க வங்கிகள், இன்சூரன்ஸ் நிறுவனங்கள், எயார்லையன்ஸ் மற்றும் இதர சேவை நிறுவனங்கள் குறைந்த வரி விதிப்பில் வர்த்தகம் செய்து வருகிறது. இதன் வரியை உயர்த்திச் சேவைகளுக்கான கட்டணத்தை அதிகரிக்கலாம்.
சீனா தற்போது 1.3 டிரில்லியன் டாலர் மதிப்பிலான அமெரிக்கக் கருவூல பத்திரங்களை வைத்துள்ளது. இதனைப் பொதுச் சந்தையில் விற்பனை செய்து விட்டால் அமெரிக்கப் பத்திரங்கள் மீதான வருமானம் அதிகளவில் குறைந்து விடும். இதனால் அமெரிக்காவின் ஒட்டுமொத்த பொருளாதாரமும் ஆட்டம் கண்டு விடும்.
இந்த நடவடிக்கையால் இரு நாடுகளும் தான் பாதிப்பு, இத்தகைய சூழ்நிலையில் இதனை நிதானமாக மனநிலையில் கையாளுவதே சிறந்த முடிவாக இருக்கும்.